Tuesday, 27 March 2018

தமிழ்நாடு வரம்பிகந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம் 2003

தமிழ்நாடு வரம்பிகந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம் 2003

(தகவல் தொகுப்பு)

 வழக்கறிஞர் சி.பி. சரவணன்  

The Tamilnadu Prohibition of Charging Exorbitant Interest Act,2003
சட்ட எண் – 38/2003

காரண விளக்கவுரை

தின வட்டி, மணிநேர வட்டி, கந்து வட்டி, மீட்டர் வட்டி மற்றும் தண்டல் போன்ற வரண்முறை இல்லா வட்டி, எவரோனும் நபரால் விதிக்கப்பட்டு, பொதுமக்கள் அதற்கு இரையாகி பொதுமக்கள் கடுந்துயர்படுவதை நீக்கும் பொருட்டு, அவ்வாறான நபர் அவ்வாறான வரம்பிகந்த வட்டிக்கு  பணம் கொடுத்தலை தடை செய்திடவும், அதற்கு கடும் தண்டணைக்கு வகை செய்திடவும், அரசானது இந்நோக்கதிற்கிணங்க புது சட்டம் இயற்றிட முடிவு செய்கிறது. 
பொருள் வரையறைகள்: - (பிரிவு.2)
(1) “தினவட்டி” எனில் நாள் தோறுமான வட்டி கணக்கிடப்படுகையில், 1957ஆம் ஆண்டு த.நா.பணம் கடன் கொடுப்போர் சட்டத்தின் பிரிவு 7-ன் கீழ் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட வட்டியைவிட கூடுதலானாது எனப் பொருள்படும். 
(2)  “கடனாளி” என்பவர் வரம்பிகந்த வட்டிக்கு கடன் பெறும் நபர் எனப் பொருள் படும்.
(3)  “வரம்பிகந்த வட்டி” என்பதில் தினவட்டி, மணிநேர வட்டி, கந்து வட்டி, மீட்டர் வட்டி மற்றும் தண்டல் உள்ளடங்கியதாக பொருள்படும். 
(4)   “மணிநேர வட்டி”  எனில் மணிக்கணக்கில் வட்டி, கணக்கிடப்படுகையில் 1957 ஆம் ஆண்டு பணம் கடன் கொடுப்போர் சட்டத்தின் பிரிவு 7-ன் கீழ் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட வட்டியை விடக் கூடுதலானது எனப் பொருள்படும். 
(5)    “கந்து வட்டி”  எனில் வட்டியானது கணக்கிடப்படுகையில் 1957 ஆம் ஆண்டு பணம் கடன் கொடுப்போர் சட்டத்தின் பிரிவு 7-ன் கீழ் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட வட்டியை விடக் கூடுதலானது எனப் பொருள்படும்.
(6)    “கடன்” எனில் தினவட்டி, மணிநேர வட்டி, கந்துவட்டி, மீட்டர் வட்டி அல்லது தண்டலுக்கு கொடுக்கப்படும் முன்பணத் தொகை எனப் பொருள்படும். 
(7)    “மீட்டர் வட்டி” எனில் வட்டியானது கணக்கிடப்படுகையில், கடன் தொகை குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுக்கப்படாத ஒவ்வொரு நாளும் வட்டியானது கணக்கிடப்படுகையில் 1957 ஆம் ஆண்டு பணம் கடன் கொடுப்போர் சட்டத்தின் பிரிவு 7-ன் கீழ் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட வட்டியை விடக் கூடுதலானது எனப் பொருள்படும்.
(8)    “தண்டல்” என்பது கடன் தொகை பகுதியுடன் வட்டியும் தினம் வசூலிக்கப்பட்டு, வட்டியானது 1957 ஆம் ஆண்டு பணம் கடன் கொடுப்போர் சட்டத்தின் பிரிவு 7-ன் கீழ் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட வட்டியை விடக் கூடுதலானது எனப் பொருள்படும்.
(9)    இச்சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆனால் பொருள் வரையறை செய்யப்படாத சொற்கள் மற்றும் சொற்றொடர்கள், 1957 ஆம் ஆண்டு த.நா. பணம் கொடுப்போர் சட்டத்தில் அதற்கென உள்ள பொருளையே கொண்டிருக்கும். 

வரம்பிகந்த வட்டி விதிப்பதை தடை செய்தல். – (பிரிவு.3)

நபர் எவரேனும் அவரால் கொடுக்கப்பட்ட கடன் தொகைக்கு வரம்பிகந்த வட்டி விதிக்கலாகாது. 

தண்டனை (பிரிவு.4)
Penalty

1957 –ஆம் ஆண்டு த.நா.கடன் கொடுப்போர் சட்டத்தில் கண்டுள்ளது எது எவ்வாறு இருப்பினும், எவரொருவர் பிரிவு 3-ன் காப்புரைகளை மீறுவாராயின் அல்லது கடன் தொகையினை வசூல் செய்திட எவரேனும் கடனாளியை தொந்திரவு அல்லது தொந்திரவு செய்திட உடந்தையாக இருப்பாராயின், 3 ஆண்டுகள் வரையான காலத்திற்கு நீடிக்கத்தக்க சிறைத் தண்டனையுடன் மற்றும் ரூ.30,000 வரை நீடிக்கத்தக்க அபராதமும் விதித்து தண்டிக்கப்படத்தக்கவராவர். 

நீதிமன்றத்தில் பணம் வைப்பீடு செய்தல் மனுதாக்கல் மற்றும் நடைமுறை:- (பிரிவு.5) 
Deposit of Money and presentation of Petition to the Court and the Procedure thereof

No comments:

Post a Comment