Tuesday, 27 March 2018

Art

கணவர் நீதிமன்ற உத்தரவுப்படி மனைவிக்கு ஜீவனாம்சம் தொகையை செலுத்தத் தவறினால் கணவர் விவாகரத்து கேட்டு தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா?

" Srinivas Manohankar Vs Sunantha (2001-2-CTC-185)" என்ற வழக்கில், கணவனிடமிருந்து மனைவி ஜீவனாம்சம் பெறுவதற்கு பல வழிமுறைகள் உள்ளது. நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்து தான் மனைவி கணவனிடமிருந்து தனக்கு வர வேண்டிய பாக்கி ஜீவனாம்சத் தொகையை பெற வேண்டும் என்று கணவர் கூறுவதை ஏற்க முடியாது. கணவர் ஜீவனாம்சத் தொகையை செலுத்தாத போது வழக்கு விசாரணையை நிறுத்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. நீதிமன்றம் கணவர் தரப்பு சாட்சி விசாரணையையும் நிறுத்தி வைக்கல என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

எனவே கணவர் நீதிமன்ற உத்தரவுப்படி மனைவிக்கு ஜீவனாம்சம் தொகையை செலுத்தத் தவறினால் கணவர் விவாகரத்து கேட்டு தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRP. NO - 2014/2010

ஞானசேகரன் Vs மகேஸ்வரி

2010-5-LW-CRL-909

No comments:

Post a Comment