Tuesday, 27 March 2018

Art

வயதான பெற்றோர் தங்கள் மகனுக்கு தானமாக சொத்து எழுதி கொடுத்தனர். பின் தங்களது மகன், அவன் சகோதரி திருமணத்திற்கு ஒரு லட்சம் பணம் தருவதாக சொன்னதை தரவில்லை என்று தான செட்டில் மெண்டை ரத்து செய்து விட்டனர். கேரள விசாரணை நீதிமன்றம், மகன் சொத்தை சுவாதீனம் எடுக்க வில்லை, பெயர் மாற்றம் வரி முதலானவற்றில் செய்ய வில்லை. அதனால் தானம் நடைமுறைக்கு வராததால் ரத்து பத்திரம் பெற்றோர் போட்டது சரி தான் என்று சொல்லி விட்டது. உயர் நீதிமன்றமும் அப்படியே தீர்ப்பு சொன்னது. மகன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். பெற்றோர் ஒரு முறை தான பத்திரம் எழுதி விட்டாலே அது செல்லும் என்றும், மகனின் நல்வாழ்வுக்காக கொடுக்க பட்டதை, ஒரு லட்சம் பணம் தரவில்லை என்று ரத்து செய்தது செல்லாது என்று மகனுக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லி விட்டது.

No comments:

Post a Comment