Tuesday, 27 March 2018

இந்திய பதிப்புரிமை சட்டத்தின் விளக்கம்

இந்திய பதிப்புரிமை சட்டத்தின் விளக்கம் .,
---------------------------------------------------------------
ஒன்றின் பதிப்புரிமை ஒருவருக்கு இருக்க வேண்டுமானால் அது முழுக்க அவரது சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். மற்றொன்றைப் பார்த்துப் படைத்த ஒன்றுக்கு ஒருவர் உரிமை கொண்டாட இயலாது. கருத்துக்களுக்கோ, ஒருவர் உரிமை கொண்டாட இயலாது. ஏனென்றால் அவை எல்லாம் பொதுச் சொத்துக்களாகும். அதற்குப் பதிப்புரிமை கிடைக்கின்றது.

இந்தச் சட்டத்தின் 45 ஆம் பிரிவு பதிப்புரிமையைப் பதிவு செய்து கொள்ள வாய்ப்பளிக்கின்றது. ஆனால் பதிவு செய்ய வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. இலக்கிய படைப்புகள், இசை, நாடகம் போன்றவற்றுக்குப் பதிப்புரிமை படைப்பாளியின் வாழ்நாள் முழுவதும் அவருக்கே சொந்தமாக இருக்கும். அவர் காலத்திற்குப் பின்பு அறுபதாண்டுகளுக்குப் பதிப்புரிமை அவரது சந்ததியினருக்கு உண்டு. புகைப்படங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றுக்கு பதிப்புரிமை வேளியாகி அறுபதாண்டுகளுக்குப் பின்பு காலாவதியாகிறது. அதன் பின்னர் யார் வேண்டுமானாலும் அவற்றை எடுத்துப் பயன்படுத்தலாம்.

Source : Mucknamalaipatti

No comments:

Post a Comment