Tuesday, 27 March 2018

ஒருவர் மற்றொருவரிடம் கடன்வாங்கியதற்கு அத்தாட்சியாகஎழுத்து மூலம் உறுதி செய்துகொள்வதற்குபயன்படுத்தப்படுகின்றதாளையே,  PROMISSORY NOTE என்று   கூறுகிறோம்.  தமிழில்சுருக்கமாக “ புரோ நோட்” என்றுசொல்கிறோம்.

ஒருவர் மற்றொருவரிடம் கடன்வாங்கியதற்கு அத்தாட்சியாகஎழுத்து மூலம் உறுதி செய்துகொள்வதற்குபயன்படுத்தப்படுகின்றதாளையே,  PROMISSORY NOTE என்று   கூறுகிறோம்.  தமிழில்சுருக்கமாக “ புரோ நோட்” என்றுசொல்கிறோம்.

கடன் கொடுத்தவர் கடனைகேட்டவுடன் கடன் வாங்கியவர்எந்தவித நிபந்தனையும் இன்றிவாங்கிய கடனை அவருக்கு திருப்பிக் கொடுக்க  வேண்டும்.இதுவே இந்த புரோ நோட்டின்சாராம்சம் ஆகும்.

மாற்றுமுறை ஆவணச் சட்டம்,நான்காவது விதியில் புரோநோட்டு பற்றி குறிப்பிடப்பட்டுஉள்ளது.

புரோ நோட்டின் சிறப்பு

⧭ இதனை முத்திரைத் தாளில் எழுதவேண்டியதில்லை. 

⧭ எங்கும் பதிவு செய்ய வேண்டும்என்பதில்லை.

⧭ சாட்சிகள் எவரும்தேவையில்லை.

⧭ எவ்வளவு பெரிய தொகையாகஇருந்தாலும் பரவாயில்லை.

⧭ சாதாரணத் தாளில் எழுதி, ஒருரூபாய் ரெவின்யூ ஸ்டாம்ப்ஒட்டினால் போதுமானது.

⧭ கடன் கொடுப்பவர்நிபந்தனைகள் விதிக்கவேண்டியதில்லை.

முக்கிய விதிகள்

⧭ கடனை கேட்டவுடன் கடன் வாங்கியவர் எந்தவித நிபந்தனையும்  இன்றி, வாங்கிய   கடனை,  கடன் கொடுத்தவருக்கு திருப்பிக் கொடுக்க  வேண்டும். 

⧭ ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டாமல்,கடன் வாங்கியவர் புரோ நோட்டில் கையெழுத்து போட்டால்அந்த புரோ நோட்டு செல்லாது.

⧭ நிபந்தனைகள் விதிக்கப்பட்டபுரோ நோட்டுகள் செல்லாது.

⧭ புரோ நோட்டு எழுதப்பட்ட நாளில்இருந்து தொடர்ந்து மூன்றுவருடங்களுக்கு பிறகு செல்லாது

⧭ கடன் வாங்கியவர் வட்டியோஅல்லது அசலோ கடன்பெற்றவரிடம் கொடுக்கும்போதுபுரோ நோட்டின் பின்புறத்தில் எழுதிஅவரது கையெழுத்தை வாங்கிக்கொள்ளவேண்டும்.

⧭ அசலும் வட்டியுமாக மொத்தத்தொகையையும் கடன் வாங்கியவர்செலுத்திவிட்டால், புரோநோட்டில்கடன் கொடுத்தவரிடம் எழுதிவாங்கிக் கொள்ள வேண்டும்.

⧭ முழுப்பணமும் செலுத்திய பிறகு,எக்காரணத்தை முன்னிட்டும்புரோநோட்டை வாங்க மறக்கக்கூடாது.

⧭ புரோநோட்டை வாங்காமல்விட்டுவிட்டால், கடன் கொடுத்தவர்,அதனை வேறு ஒருவருக்கு”மேடோவர்” முறையில் எழுதிக்கொடுத்துவிட வாய்ப்பு உண்டு.

⧭ வட்டி மற்றும் அசல் கடன்வாங்கியவர் செலுத்தும்போது,அதனை பெற்றுக் கொண்டு கடன்கொடுத்தவர் தருகின்ற ரசீதுசெல்லாது.

⧭ கடன் வாங்கியவர் திருப்பிக்கொடுக்கவில்லை என்றால்,காவல்நிலையத்தில் புகார் அளிக்கமுடியாது. சிவில் வழக்கு தான்போடவேண்டும்.

2 comments:

  1. கடன் வாங்கியவர் நான் கடன் வாங்கவில்லை ப்ரோநோட்டில் உள்ள கையெழுத்து என்னுடையதில்லை எனும்போது சிவில் வழக்கில் கடனை திரும்பபெறமுடியுமா.?

    ReplyDelete