இந்த வழக்கில் கண்ட நாகராஜன் என்பவர் தனக்கு வர வேண்டிய பணம் ரூ. 18 லட்சத்தை வட்டியுடன் வசூலிக்க கனகராஜ் என்பவர் மீது ஒரு வழக்கை கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிக்கப்பட்டு வழக்கறிஞர்களின் வாதத்திற்காக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் நாகராஜனின் வழக்கறிஞர் கவனக்குறைவு காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே கீழமை நீதிமன்றம் சாட்சியங்களை பரிசீலித்து நாகராஜனின் வழக்கை தள்ளுபடி செய்து விட்டார் . அதனை எதிர்த்து நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டை தாக்கல் செய்தார்.
வழக்கை நீதிபதி திரு. M. M. சுந்தரேஷ் மற்றும் N. பால் வசந்தகுமார் ஆகியோர்கள் அடங்கிய அமர்வு விசாரித்தது.
உச்சநீதிமன்றம் "மல்கெய்ட் சிங் Vs ஜோகிந்தர் சிங் (1997-3-CTC-SC-619)" என்ற வழக்கில் பத்தி 7ல், ஒரு வழக்கு சம்மந்தப்பட்டவர்கள் வழக்கறிஞரை நியமித்து முறையாக வழக்கு நடத்தி வரும் நிலையில் அவர்களுடைய வழக்கறிஞர்கள் வழக்கு நடத்துவதிலிருந்து விலகிக் கொண்டால் (Reported No Instructions) வழக்கு நடத்துபவர்களுக்கு (Parties to the Suit) ஒரு அறிவிப்பினை நீதிமன்றம் அனுப்ப வேண்டும். அவ்வாறு அறிவிப்பு அனுப்பாமல் வழக்கினை மேற்கொண்டு நடத்தக்கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
அதேபோல் உச்சநீதிமன்றம் "சண்டிகர் அரசு Vs ரகுராஜ் (AIR-2009-SC-514)" என்ற வழக்கில், வழக்கு சம்மந்தப்பட்டவர் தன்னுடைய வழக்கை நடத்துவதற்கு வழக்கறிஞரை நியமித்து விட்டால் அந்த வழக்கறிஞரின் அந்த வழக்கில் ஆஜராக தவறிவிட்டால் அதற்காக வழக்கு சம்மந்தப்பட்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
எனவே ஒரு உரிமையியல் வழக்கில் பிரதிவாதியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது ஆஜராக தவறிவிட்டால் பிரதிவாதிக்கு நீதிமன்றம் ஒரு அறிவிப்பை அனுப்ப வேண்டும், மாறாக விசாரித்து அல்லது பரிசீலித்து வழக்கில் தீர்ப்பளிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
O. S. A. NO - 391/2011
A. நாகராஜன் Vs P. P. M. கனகராஜ்
2013-1-MWN-CIVIL-867
No comments:
Post a Comment