Tuesday, 27 March 2018

Art

உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்யும் போது நீதிமன்றம் வழக்குரையில் கூறப்பட்டுள்ள சங்கதிகளுக்கு எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் இருக்கிறதா? இல்லையா? என்பதை ஆராய வேண்டிய அவசியம் இல்லை.

வழக்கிற்கான ஆதாரம் இருக்கிறதா? இல்லையா? என்பதை விசாரணையின் பொழுது தான் தீர்மானிக்க வேண்டும். விசாரணை நீதிமன்றமானது வழக்கு தொடுப்பதற்கான வழக்கு மூலம் (Cause of Action) உள்ளதா? என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். அதை விடுத்து வாதி கோரிய பரிகாரத்தை வழங்க முடியுமா? முடியாதா? என்பதை ஆராயக்கூடாது.

இதுகுறித்து உச்சநீதிமன்றம் " HPCL கோயம்புத்தூர் Vs C. M. ஹரிராஜ் (2002-3-LW-476)" என்ற வழக்கில் தெளிவாக விவாதித்துள்ளது.

ஒரு வழக்கிற்கு எண் வழங்குகிற நிலையில் அந்த வழக்கின் தகுதிகளை பார்க்கக்கூடாது. வழக்கின் தகுதியென்பது விசாரணையின் போது பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

எனவே வழக்கிற்கு எண் வழங்கும் நிலையில் வழக்கு மூலம் இருக்கிறதா? என்பதை மட்டுமே விசாரணை நீதிமன்றம் பார்க்க வேண்டும். ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கிற்கு எண் வழங்க மறக்கக்கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRP. NO - 1543/2012

M.சின்னையா Vs நைனா முகமது மற்றும் நுர்ஜஹான் பேகம்

2012-5-LW-CIVIL-250

No comments:

Post a Comment