காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனு மீது காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் (வழக்கு) பதிவு செய்ய மறுத்தால் நீதிமன்றத்தை அனுகி எப்.ஐ.ஆர் (வழக்கு) பதிவு செய்யலாம். நீதிமன்றத்தில் காவல் துறை மூலம் அல்லாமல் பாதிகப்பட்டவரே நேரடியாக தாக்கல் செய்யும் புகார் மனுவை தனி முறையீட்டு மனு அல்லது தனி முறையீட்டு வழக்கு என்பார்கள்
பாதிக்கப்பட்ட நபர் வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாக புகார் மனுவை உரிய காவல் நிலையத்தில் கொடுத்து (எப்.ஐ.ஆர்) வழக்கு பதிய சொல்லி வலியுறுத்தலாம்
வழக்கினை பதிவு செய்ய (வழக்கினை விசாரனைக்கு ஏற்க) மறுத்தால் அல்லது காலம் தாழ்த்தினால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (அ) காவல் ஆணையளாரிடம் குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவு 154 (3) -ல் புகார் மனுவை எழுத்து மூலமாக கொடுக்க வேண்டும்
பிறகு உரிய குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவு 200-ல் தனி புகார் ஒன்றினை கொடுத்து குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவு 156 (3) படி எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்திரவு பெறலாம்.
அல்லது நேரடியாக உயர் நீதிமன்றத்தையும் அனுகி எப்.ஐ.ஆர் போட உத்திரவும் பெறலாம்
நீதிமன்ற உத்திரவுக்கு பிறகு வேறு வழியில்லாமல் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்வார்கள் எப்.ஐ.ஆர் பதிவு செய்த பிறகு காவல் துறையினர் விசாரனை செய்து வழக்கில் போதுமான ஆதாரம் இருப்பின் குற்றபத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள்
No comments:
Post a Comment