முஸ்லிம் கணவர்-மனைவி பிரிந்து விட்டனர்.5 1/2 வயது மகன் தாயுடன் பக்கத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்தான். அவனை மாஜி கணவரின் பெற்றோர் கடத்தி கொண்டு போய் விட்டதாகவும், அவனை கோர்ட்டில் உயிரோடு அல்லது பிணமாக ஒப்படைக்க வேண்டும் என்று அவனது தாய் ஹேபியஸ் கார்ப்பஸ் ரிட் மனு கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். மைனர் மகனை தாயிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதி, யார் கார்டியன் என்பதை குடும்ப நீதிமன்றத்திற்கு சென்று கணவர்-மனைவி முடிவு செய்து கொள்ளலாம். இப்போதைக்கு தாயின் கஸ்டடியில் பள்ளியில் படித்து கொண்டு இருந்த மகன் தாய் வசமே இருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். தீர்ப்பை வாசிக்கும் போது தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மன்னன் திரைப்பட பாடலான "அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே, அம்மாவை வணங்காது உயர்வில்லையே" என்று பாட்டு பாடி தீர்ப்பு வாசித்தார். மேலும் ஒரு தாய் என்பவர், அனைவர் இடத்தையும் பிடிக்க முடியும், ஆனால், ஒரு அம்மாவின் இடத்தை யாரும் பிடிக்க முடியாது என்று நீதிபதி குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment