Tuesday, 27 March 2018

Art

மும்பையில் கணவர், தாஜ் ஓட்டலில் வேலை. மனைவி, பிரிட்டிஷ் ஏர்வேஸில் வேலை பார்க்கிறார்கள். இரண்டு வயதுக்கு வந்த மகள்கள் அவர்களுக்கு. முதலில் இரண்டு பிளாட்களில் வசித்தவர்கள், பின் ஒரு வீடு இருவர் பேரில் ஜாயிண்ட் ஆக வாங்கி வசித்தனர் மனைவி, சிறப்பு திருமண சட்ட படி விவாகரத்து கேட்டு குடும்ப நீதிமன்றத்தில் கணவர் கொடுமைப்படுத்துவதாக மனு தாக்கல் செய்தார். குடும்ப வன்முறை சட்டத்திலும் மனு தாக்கல் செய்தார். இடைக்கால ஜுவனாம்சமும் கேட்டார். வழக்கு முடியும் வரை குடும்ப வன்முறை சட்ட  பிரிவு 19(1) படி, கணவர் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசிக்க உத்தரவு கேட்டு இடைநிலை மனு தாக்கல் செய்தார். கணவரின் அம்மா வீடு அங்கிருந்து ஐந்து நிமிடம் தொலைவில் உள்ளதாக சொல்லி இருந்தார். இரண்டு மகள்கள் அம்மாவுக்கு ஆதரவாக அபிடவிட் போட்டு இருந்தனர். குடும்ப நீதிபதி மனுவை விசாரித்து, மனைவிக்கு சாதகமாக கணவரை வழக்கு முடியும் வரை வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கணவர் ரிட் மனு தாக்கல் செய்தார். அங்கும் கணவருக்கு எதிராக தீர்ப்பு. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் கணவர். மெயின் வழக்கிலும் கணவர் வீட்டை விட்டு வெளியேற மனைவி கேட்டுள்ளார், அது போல இடைநிலை மனுவிலும். அதனால் விசாரணை செய்யாமல் கணவனை வெளியேறி இருக்க சொன்னது தவறு என்று கணவர் வாதிட்டார். மனைவி, வேறு இடைநிலை மனுவை அழுத்தம் கொடுக்க வில்லை. இரு மகள்கள் அப்பாவுக்கு எதிராக சொல்லி உள்ளதையும், கணவர் அம்மா வீடு அருகில் இருப்பதையும், சட்ட படி கணவர் ஜாயிண்ட் ஓனராக இருந்தாலும் மனைவிக்கு அவர் கோரிய பரிகாரம் கிடைக்க கூடியது என்று மனைவிக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

No comments:

Post a Comment