பொது உரிமையியல் சட்டம்
இசுலாமியச் சட்ட முறைமைபகுதியாகவும், முழுமையாகவும் கடைப்பிடிக்கும் நாடுகள்
நீதித் துறையில் மட்டும் ஷரியாவைஏற்றுக் கொள்ளாதவைகள்
தனிநபர் சட்டத்தில் மட்டும் ஷரியாவை ஏற்றுக் கொண்டவைகள்
ஷரியா சட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டவைகள்
நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் ஷரியாவை ஏற்றுக் கொண்டவைகள்
பொது உரிமையியல் சட்டம் அல்லதுபொது சிவில் சட்டம் (Uniform civil code) என்பது ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொதுவான உரிமையியல் மற்றும் தண்டனைச் சட்டங்களைக் குறிக்கிறது. உலகில் பெரும்பான்மை நாடுகளில் அனைத்து சமயத்திற்கான பொது உரிமையில் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் சில நாடுகளில், குறிப்பாக இசுலாமியப் பெரும்பாண்மை கொண்ட நாடுகளான சௌதி அரேபியா, ஏமன், இரான், ஜோர்டான், சிரியா, லெபனான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மட்டுமே உரிமையியல் மற்றும் தண்டனைச் சட்டங்களில், ஷரியத் சட்டம் முழுமையாக நடைமுறையில் உள்ளது. சில நாடுகளில் இசுலாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் மட்டுமே ஷரியத் சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் இசுலாமியர்களுக்கான உரிமையியல் சட்டத்தைப் பொருத்தவரை, ஷரியத் சட்டமே மூலமாக அமைந்துள்ளது.
இந்தியாவில் பொது சிவில் சட்டம்
இந்தியாவில் கோவா மட்டுமே பொது உரிமையியல் சட்டத்தை பின்பற்றி வருகிறது.[1] சமய சார்பற்ற நாடானஇந்தியாவில், வாழும் பல்வேறு சமய மக்களுக்கான தனிநபர் சட்டத்தினை (Personal Law) நீக்கி, அதற்கு பதிலாக நாட்டின் அனைத்து தரப்பு சமய மக்கள் கடைப்பிடிக்க வசதியாக பொது உரிமையியல் சட்டத்தை நடைமுறைப்படுத்த, 1949 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் சரத்து 44-இல் பரிந்துரை செய்தது.[2]ஆனால் இது வரை இந்திய அரசு பொது உரிமையியல் சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்தவில்லை.[3] உச்ச நீதிமன்றமும் பொது உரிமையியல் சட்டத்தினை இயற்ற இந்திய அரசுக்கு கருத்து தெரிவித்துள்ளது. முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதை வரவேற்றார்.[4][5][6][7] ஆனால் இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டுவர இசுலாமியர்கள் கடும் எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.[8]
பொது சிவில் சட்டத்தின் நோக்கம்
இந்து தனிநபர் சட்டப்படி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காள மாநிலம் தவிர இந்தியாவின் பிற மாநிலங்களில், இந்து சமய மகளிர்க்கு சொத்து மற்றும் பரம்பரை சொத்துகளில் உரிமையில்லை. எனவே இந்த ஆண் - பெண்களுக்கிடையே உள்ள சொத்து உரிமையில் ஏற்றத் தாழ்வை நீக்க பொது சிவில் சட்டத்தால் மட்டுமே இயலும்.முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது, முஸ்லீம் அல்லாத கணவன் இரண்டாம் திருமனம் செய்து கொண்டால், அச்செயலை குற்றமாக கருதி இந்திய தண்டனைச் சட்டம் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படுகிறது. அதே செயலை ஒரு இசுலாமிய ஆண் செய்தால் இந்திய தண்டனைச் சட்டம் குற்றமாக கருதுவதில்லை.சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க, இரண்டாம் திருமணம் செய்து கொள்ள நினைக்கும் இசுலாமியர் அல்லாத ஒரு ஆண் அல்லது பெண், இசுலாம் சமயத்தில் சேர்ந்து பின் இரண்டாம் திருமணம் செய்து கொள்வதை தடுத்து நிறுத்திட இந்திய தண்டனைச் சட்டத்தில் இடமில்லை.முஸ்லீம் திருமண முறிவு மற்றும்ஜீவனாம்சம் பொருத்தவரை, இசுலாம் தனிநபர் சட்டமான ஷரியத் சட்டம் நடைமுறையில் உள்ளதால் இசுலாமியப் பெண்களுக்கு, பிற சமய பெண்கள் அளவிற்கு சமூக[சான்று தேவை], பொருளாதார அளவில் பாதுகாப்பு கிடைப்பதில்லை.[9]திருமணம், திருமண முறிவு, ஜீவனாம்சம், வாரிசுரிமை, சொத்து மற்றும் பரம்பரைச் சொத்தைப் பங்கீடு செய்தல், குழுந்தைகளை தத்து எடுத்தல் போன்றவற்றில் சமயம் சார்ந்த தனி நபர் சட்டங்கள் நடைமுறையில் உள்ளது. எடுத்துக்காட்டாக இசுலாமியர்களுக்கு திருமணம், திருமண முறிவு, ஜீவனாம்சம், சொத்துரிமை போன்றவைகளில் மட்டுமே, ஷரியத் சட்டத்தின் படிதீர்மானிக்கப்படுகிறது. ஆனால் குற்ற வழக்குகளில் இசுலாமியர்கள் ஷரியத் சட்டத்தின் வரம்பில் வருவதில்லை. பிரித்தானிய இந்திய அரசு இயற்றிய இந்திய தண்டனைச் சட்டமே, அனைத்து சமயத்தினருக்கும் பொதுவாக உள்ளது.
விவாதத்திற்கு உட்படும் பொது சிவில் சட்டம்
எந்தவொரு ஆணோ,பெண்ணோ அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் மதம் மாறாமலேயே திருமணம் செய்து கொள்ளும் உரிமைக்கும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமணக் கொள்கைக்கும் எதிராக மதங்கள் வழங்கும் சலுகைகளை நிராகரித்தல்.ஆண், பெண் இருவரின் ஒப்புதல் இருப்பின் நீதிமன்றத்தில் மணவிலக்கு பெறும் உரிமை.கணவனால் மணவிலக்கு செய்யப்பட்ட மனைவியும், குழந்தைகளும் அவனிடமிருந்துஜீவனாம்சம் பெறும் உரிமை.பருவம் வராத சிறுவர் – சிறுமிகளுக்கு பெற்றோர்களே காப்பாளர்கள் என்ற மதச்சட்டங்களுக்கு மாறாக, அச்சிறுவர்களின் நலனில் அக்கறை கொண்ட வேறு யாரையேனும் கூட நியமிப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம்.சொத்து மற்றும் பாரம்பரியச் சொத்துக்களில் ஆண் -பெண் இருபாலருக்கும் சம உரிமை.மணமான அல்லது மணமாகாத எந்தவொரு ஆணும் பெண்ணும் குழந்தையொன்றைத் தத்து எடுத்து கொள்ள சட்ட பூர்வமான உரிமை.
[2/7, 8:04 AM] +91 90422 07644: லோக் ஆயுக்தா என்றால் என்ன?
இந்தியா எதிர்காலத்தில் வல்லரசாக மாறும் வாய்ப்புள்ள ஒரு நாடு. அதற்க்கு எல்லா வளங்களும் இந்தியாவில் உள்ளன. குறிப்பாக மற்ற எந்த நாடுகளிலும் இல்லாத அளவு மனித வளம் மற்றும் இளைஞர்கள் நிறைந்த நாடு இந்தியா. இத்தனை வளங்களும் வாய்ப்புகளும் இருந்தும், இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாய் இருக்கின்ற பல்வேறு பிரச்சனைகளில் முக்கியமாது அதிகார மட்டத்தில் உள்ள ஊழலும் லஞ்சமும் ஆகும்.இன்று நாட்டிலுள்ள மக்களின் பெரும்பாலானோர் வறுமையில் வாடும் பொது அரசியல் வாதிகள் மட்டும் சுக போகத்தில் திளைப்பதை காணமுடிகிறது.
அருண் சென் குப்தா கமிட்டி அறிக்கை நாட்டிலுள்ள வறுமை கோட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை 74.7% என்று கூறுகிறது. இது போன்ற பசியிளிருந்தும், கல்வியின்மை, சுகாதாரச் சீர்கேட்டை விட்டும் இந்திய பூர்வீக மக்களை காப்பாற்ற வேண்டிய அரசாங்கம் என்ன செய்கிறது? அரசியல்வாதிகளும் அடிகாரவர்க்கத்தினரும் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுகின்றனர். மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் இந்த கருப்பு பணத்தை சுவீஸ் போன்ற வெளிநாட்டு வங்கியில் பதுக்கி வைக்கின்றனர். GLOBAL FINANCE INSTITUTE அறிக்கையின்படி கடந்த 59 வருடத்தில் 211 பில்லியன் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 17.7% அளவிற்கு மொத்த உற்பத்தியில்(Gross Total Production) இழப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதன் மூலம் 211 பில்லியன் டாலர் வரி ஏய்ப்பு நடந்துள்ளது. இது அரசாங்கத்திற்கு தெரிந்தே தான் நடக்கிறது. இது இந்தியாவில் முறையாக செலவழிக்கப்பட்டிருந்தால் ஏகப்பட்ட கடன் அடைக்கப்பட்டிருக்கும்.
லோக் ஆயுக்தா என்பது அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் பாத்தும், லஞ்ச ஊழலில் ஈடுபடும் போதும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விசாரணை மன்றம். இந்த விசாரணை மன்றம் முதன்முதலில் 1809- ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டில் அமைக்கப்பட்டது. அதன்பிறகு மேலும் பல நாடுகள் இந்த விசாரணை மன்றத்தை அமைத்தன. இந்தியாவில் 1996 ம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையிலான ADMINISTRATIVE REFORMS COMMISSION (ARC) என்று சொல்லப்படும் நிர்வாக மறு ஆய்வுக் குழு, இந்தியாவில் நடைபெறும் அதிகார முறைகேடுகளை விசாரிக்கவும், பொது மக்களை அதன் கண்காணிப்பாளர்களாக ஆக்கவும் இரண்டு பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்தது. அதில் ஒன்று, மத்திய அரசின் அதிகாரிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் முறைகேடுகளில் ஈடுபடும் போது அவர்களை விசாரிப்பதர்க்கென தனியொரு விசாரணை மன்றம் "லோக்பால்" அமைக்க வேண்டும். இரண்டாவதாக, மாநில அளவில் நடைபெறும் அதிகார முறைகேடுகளை கண்காணிக்க "லோக் ஆயுக்தா" எனும் விசாரணை மன்றத்தை அமைக்க வேண்டும். இந்த பரிந்துரைகளை மேற்கண்ட குழு அரசுக்கு சமர்ப்பித்தது. இதில் "லோக் பால்" இன்று வரை சட்டமாக்கப்படவில்லை. அதற்க்கான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. லோக் ஆயுக்தா மசோதா ஏற்கப்பட்டு பல்வேறு இந்திய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது
லோக் ஆயுக்தா தற்போது நடைமுறையில் உள்ள மாநிலங்களாக மகாராஷ்டிரா(1971), பீகார்(1973), ராஜஸ்தான்(1973), உத்திரபிரதேசம்(1975), மத்திய பிரதேசம்(1981), ஆந்திரா(1983), ஹிமாச்சல் பிரதேசம்(1983), கர்நாடகா(1985), அஸ்ஸாம்(1986), குஜராத்(1986), கேரளா(1988), பஞ்சாப்(1985), டெல்லி(1996), ஹரியான(1996) ஆகியவை உள்ளன. இந்த சட்டத்தின்படி எந்த ஒரு தனி மனிதரும், வழக்கு தொடுக்க முடியும். பொதுமக்கள் தங்களது புகார்களை எழுதி லோக் ஆயுக்தா அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். நாம் கொடுக்கும் புகார் விசாரிக்கப்படும். விசாரணையில் ஏதேனும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தவறிழைத்தது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் கீழ்காணும் முறைகளில் தண்டிக்கப்படலாம். அதாவது அரசு அலுவலர்களின் அதிகாரத்தை குறைத்து பதவியிறக்கம் செய்தல், கட்டாய ஒய்வு அளித்தால், வேலையை விட்டு நீக்குதல், ஆண்டு சம்பள உயர்வு விகிதத்தை நிறுத்துதல் ஆகிய பரிந்துரைகளை லோக் ஆயுக்தா நிறுவனம் அரசுக்கு அளிக்கும்.மாநில அரசானது இந்த பரிந்துரைகளை ஏற்கலாம் அல்லது மாற்றலாம். அரசு ஊழியர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க மாநில உயர்நீதி மன்றம் அல்லது சிறப்பு தீர்ப்பாயம் ஆகியவற்றை அணுகலாம். இச்சட்டம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுவது முக்கிய குறைபாடாக கருதப்படுகிறது. உதாரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தவறிழைத்த அதிகாரிகளின் பெயர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னும் வெளியிடப்படுவதில்லை.
லோக் ஆயுக்தாவின் அதிகாரிகளை மாநில கவர்னர் நியமனம் செய்கிறார். மேலும் நியமனம் தொடர்பான ஆலோசனைகளை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மற்றும் மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் பெற வேண்டும். லோக் ஆயுக்தாவின் நிர்வாகிகளாக பாராளுமன்ற உறுப்பினரையோ, சட்ட மன்ற உறுப்பினரையோ அல்லது ஏதேனும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களை நியமிக்க முடியாது. லோக் ஆயுக்தா சட்டங்கள் மாநிலத்திற்க்கேற்ப மாறுபடுகின்றன. டெல்லியில் உள்ள சட்டத்தின்படி முறையான புகார் கொடுக்கப்பட்டால், மாநில முதல்வர், மாநில அமைச்சர்கள், மாநகர மன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்கங்களின் தலைவர், துணைத்தலைவர், இயக்குநர்கள், ஆகியோரை விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இது அதிகாரிகளின் ஊழல், ஒருசார்பு நிலை, அடக்குமுறை, நேரிதவறுதல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு ஆகியவை குறித்து உரிய ஆவணங்களுடன் புகார் செய்யலாம். எந்த ஒரு தனி மனிதரும், அவர் அரசு அதிகாரிகளால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது அவ்வாறு இல்லாவிட்டாலும் உரிய ஆவணங்கள் தம்மிடம் இருப்பின் அவர் வழக்கு தொடுக்க முடியும். அதிகாரவர்க்கத்தை நடுநடுங்கச் செய்யும் இந்தச் சட்டம் தமிழகத்தில் அமுல்படுத்த வேண்டும் என்பதே நாட்டின் நலனில் அக்கறை உடையவர்களின் எதிர்பார்ப்பு. லோக் ஆயுக்தா சட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு அதனை அரசு அதிகாரிகள் முறையாக செயல்படுத்த வேண்டும் என்பதே பொது மக்களின் அவா.
நன்றி - melapalayamvoice.blogspot.com
[2/7, 8:10 AM] +91 90422 07644: பெயில் பற்றிய முழு விபரங்கள்
குற்றம் புரிந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குத் தொடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை சமர்ப்பித்து அவர்களால்தான் அந்தக் குற்றம் செய்யப்பட்டது என்பதை நிரூபித்து குற்றவாளிகளுக்குத் தண்டணை பெற்றுத் தருகிறார்கள். இது போன்ற வழக்குகளானது அதில் செய்யப்பட்டதாக சொல்லப்படுகின்ற குற்றங்களைப் பொறுத்து, பெயிலில்விடக்கூடிய வழக்கு’ மற்றும் ‘பெயிலில் விட முடியாத வழக்கு’ என்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
பெயிலில் விடக்கூடிய வழக்குகள் (Bailable Offence)
இவை பெரும்பாலும் சிறு சிறு குற்றங்களாகும். இது போன்ற குற்றங்களில் காவல்துறை அதிகாரியே கைது செய்யப்பட்டவரை பெயிலில் விடுவிக்கலாம். ஜாமீன் தருவோர்கூட தேவையில்லை. கைது செய்யப்பட்டவரிடமே ஜாமீன் பெற்று கொண்டு அவரை காவல்துறை அதிகாரி பெயிலில் விடலாம்.
பெயிலில் விட முடியாத வழக்குகள் (Non Bailable Offence)
இவை இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட சிறைத் தண்டணை விதிக்கும் அளவிற்கு உள்ள பெரிய குற்றங்களாகும். இதுபோன்ற குற்றங்களைச் செய்தவர்களை காவல்துறை அதிகாரியால் கைது செய்யத்தான் முடியும். பெயிலில் விட முடியாது. எனவே இது போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உரிய நீதிமன்றத்தில்தான் பெயில் பெற முடியும்.
அவ்வாறு பெயிலில் விட முடியாத வழக்கு ஒன்றில் காவல்துறையினரால் குற்றஞ்சாட்டப்பட்டவர் ஒருவர் நீதிமன்றத்தில் பெயில் கேட்டால், அவருக்கு எதிராக வாதாடக்கூடிய, அரசு தரப்பு வழக்கறிஞர் அந்த குற்றவாளிக்கு பெயில் கொடுக்கக் கூடாது என்று ஆட்சேபணை செய்வார். எதனால் ஆட்சேபணை செய்கிறீர்கள்? என்று நீதிபதி கேட்டால், கீழ்க்கண்ட காரணங்களைக் கூறுவார்.
1. குற்றவாளி விசாரணையின் போது முறையாக ஆஜராக மாட்டார்
2. சாட்சிகளை கலைத்துவிடுவார்.
3. பெயிலில் வந்த பிறகு அவர் மேலும் வேறு குற்றங்களைப் புரிவார்
4. காவல்துறையின் விசாரணை இன்னும் முடியவில்லை
5. திருட்டுபோன பொருட்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை
6. குற்றம் புரிய பயன்படுத்திய ஆவணங்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை
7. சக குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.
8. சாட்சிகளின் உயிருக்கு ஆபத்து.
குற்றம் சாட்டப்பட்டவர் அரசு தரப்பு / எதிர் தரப்பு வழக்கறிஞர் கூறும் இத்தகைய குற்றச்சாட்டுகளை மறுத்து பதிலளிக்க வேண்டும்.இல்லாவிட்டால் பெயில் கிடைக்காது.
பெயிலில் வர மனு எப்படிப் போடுவது?
குற்றஞ்சாட்டப்பட்டவர் சிறையில் இருக்கும்போது தன்னுடைய உறவினர்களின் மூலமாகவோ அல்லது நண்பர்களின் மூலமாகவோ பெயிலில் வருவதற்கு தகுந்த வழக்கறிஞரின் உதவியை நாடலாம்.
இலவசமாக பெயில் எடுப்பதற்கு, வாரம் ஒருமுறை நேரடியாக ஜெயிலுக்கே வந்து, ஜெயிலில் உள்ளவர்களை இலவச சட்ட உதவி மைய வழக்கறிஞர் ஒருவர் சந்திப்பார். அவர் மூலமாகவும் உறவினர்களை அல்லது நண்பர்களை தொடர்பு கொண்டு முயற்சி செய்யலாம்.
குற்றஞ்சாட்டப்பட்டவர் சட்டநுணுக்கங்கள் தெரிந்தவராக இருந்தால் நேரடியாகவே ஜெயில் அதிகாரி மூலமாக நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம். அந்த மனுவில் பெயில் பெறுவதற்காக கீழ்க்கண்ட தகுந்த காரணங்களை குற்றஞ்சாட்டப்பட்டவர் குறிப்பிட வேண்டும்.
1. பெயிலில் செல்லாவிட்டால் தனது வேலையை இழக்க நேரிடும்.
2. குடும்பத்தில் தான் மட்டுமே சம்பாதிக்கும் நபர் என்பதால், தனது குடும்பம் வருமானம் இன்றி பாதிக்கப்படுகிறது
3. தனக்கு உடல் நலமில்லை, வெளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தால்தான் குணமாக முடியும்.
4. மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேல் முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும்போது தண்டனை கைதியை தொடர்ந்து சிறையில் வைப்பது என்பது நீதிக்கு எதிரானது.
ஜாமீன்
குற்றஞ்சாட்டப்பட்டவரை பெயிலில் எடுப்பதற்கு அது சிறிய குற்றம் என்றால், ரூ.50,000/- மதிப்புள்ள அசையா சொத்து வைத்திருக்கும் இரண்டு நபர்கள் ஜாமீன் கொடுக்க வேண்டும். வழக்கறிஞர் குறிப்பிடும் நாளில் ஜாமீன்தாரர்கள். நீதிமன்றத்திற்கு அசல் குடும்ப அட்டையுடன் செல்ல வேண்டும். நீதிபதி அவர்களிடம், குற்றம் சாட்டப்பட்டவரை உங்களுக்கு எப்படித் தெரியும்? அவர் பெயர் என்ன? அவரது தந்தையின் பெயர் என்ன? அவர் எந்த ஊரில் வசித்து வருகிறார்? அவரது மனைவி பெயர் என்ன? என்ன குற்றம் செய்துள்ளார்? உங்கள் பெயர் என்ன? உங்கள் தந்தையின் பெயர் என்ன? உங்கள் சொத்து எந்த ஊரில் உள்ளது? அதன் மதிப்பு என்ன? என்ற கேள்விகளை கேட்பார். அவற்றிற்கு தகுந்த பதில்களை ஜாமீன் அளிப்பவர் சொல்ல வேண்டும். குறிப்பிடும் நிபந்தனைகளின்படி குற்றஞ்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் அல்லது காவல் நிலையத்தில் ஆஜராகாவிட்டால் உங்களை கைது செய்ய நேரிடும்! என்பதையும் நீதிபதி ஜாமீன்தாரர்களிடம் தெரிவிப்பார். பின்பு ஜாமீந்தாரர்களின் குடும்ப அட்டையில் நீதிமன்ற முத்திரை வைத்து பெயில் வழங்கப்படும்.
பெயில் மறுப்பு மற்றும் மேல் முறையீடு
குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை பெயிலில்விட நீதிபதி மறுத்தால் அதற்கான காரணங்களை அவர் தனது தீர்ப்பில் கூறவேண்டும். அதனை வைத்துதான் குற்றம் சாட்டப்பட்டவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.
ஒருவரது பெயில்மனு தள்ளுபடி ஆனால் அதே நீதிமன்றத்தில் சில காலம் கழித்து மீண்டும் மனு போடலாம் அல்லது உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்யலாம்
முன் ஜாமீன் (Anticipatory Bail)
தன் எதிராளிகளால் பொய்யான வழக்கு தன்மீது போடப்பட்டு சில நாட்களாவது தன்னை சிறை வைக்க முயலக்கூடும் என ஒருவர் எண்ணினால் முன் ஜாமீன் கேட்டு மனு செய்ய சட்டத்தில் இடமுண்டு
இதற்கான மனுவை அவர் மாவட்ட நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். வாரன்ட் இல்லாமல் போலிசாரால் கைது செய்யப்பட்டால் , அவர் ஜாமீன் தர தயார் என்றால் அவரை ஜாமீனில் விட வேண்டும் என்று இந்த முன் ஜாமீன் மூலம் நீதிமன்றம் உறுதி செய்கிறது.
குறிப்பு:
உச்சநீதிமன்றத்தில் பெயில் ஆர்டர் பெற்றிருந்தால்கூட, தண்டனை கொடுத்தவர்களே பெயில் கொடுக்க வேண்டும் என்பதால் தண்டணை வழங்கப்பட்ட நீதிமன்றத்தில்தான் அந்த பெயில் ஆர்டரை கொடுத்து பெயில் பெற வேண்டும் என்பது சட்டமாகும்.......... நன்றி... மருத்துவர்கள்
No comments:
Post a Comment