Tuesday, 27 March 2018

தமிழ்நாடு வரம்பிகந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம் 2003

தமிழ்நாடு வரம்பிகந்த
வட்டி விதிப்பு தடுப்புச்
சட்டம் 2003

அறிமுகம்

😁😅

தின வட்டி, மணிநேர வட்டி, கந்து வட்டி, மீட்டர் வட்டி மற்றும் தண்டல் போன்ற வரண்முறை இல்லா வட்டி, எவரோனும் நபரால் விதிக்கப்பட்டு, பொதுமக்கள் அதற்கு இரையாகி பொதுமக்கள் கடுந்துயர்படுவதை நீக்கும் பொருட்டு, அவ்வாறான நபர் அவ்வாறான வரம்பிகந்த வட்டிக்கு பணம் கொடுத்தலை தடை செய்திடவும், அதற்கு கடும் தண்டணைக்கு வகை செய்திடவும், இச்சட்டம் இயற்றப்பட்டது.

😄😅

பொருள் வரையறைகள்

“தினவட்டி” எனில் நாள் தோறுமான வட்டி கணக்கிடப்படுகையில், 1957ஆம் ஆண்டு த.நா.பணம் கடன் கொடுப்போர் சட்டத்தின் பிரிவு 7-ன் கீழ் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட வட்டியைவிட கூடுதலானாது எனப் பொருள்படும்.“கடனாளி” என்பவர் வரம்பிகந்த வட்டிக்கு கடன் பெறும் நபர் எனப் பொருள் படும்.“வரம்பிகந்த வட்டி” என்பதில் தினவட்டி, மணிநேர வட்டி, கந்து வட்டி, மீட்டர் வட்டி மற்றும் தண்டல் உள்ளடங்கியதாக பொருள்படும்.“மணிநேர வட்டி” எனில் மணிக்கணக்கில் வட்டி கணக்கிடப்படுகையில் 1957 ஆம் ஆண்டு பணம் கடன் கொடுப்போர் சட்டத்தின் பிரிவு 7-ன் கீழ் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட வட்டியை விடக் கூடுதலானது எனப் பொருள்படும்.“கந்து வட்டி” எனில் வட்டியானது கணக்கிடப்படுகையில் 1957 ஆம் ஆண்டு பணம் கடன் கொடுப்போர் சட்டத்தின் பிரிவு 7-ன் கீழ் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட வட்டியை விடக் கூடுதலானது எனப் பொருள்படும்.“கடன்” எனில் தினவட்டி, மணிநேர வட்டி, கந்துவட்டி, மீட்டர் வட்டி அல்லது தண்டலுக்கு கொடுக்கப்படும் முன்பணத் தொகை எனப் பொருள்படும்.“மீட்டர் வட்டி” எனில் வட்டியானது கணக்கிடப்படுகையில், கடன் தொகை குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுக்கப்படாத ஒவ்வொரு நாளும் வட்டியானது கணக்கிடப்படுகையில் 1957 ஆம் ஆண்டு பணம் கடன் கொடுப்போர் சட்டத்தின் பிரிவு 7-ன் கீழ் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட வட்டியை விடக் கூடுதலானது எனப் பொருள்படும்.“தண்டல்” என்பது கடன் தொகை பகுதியுடன் வட்டியும் தினம் வசூலிக்கப்பட்டு, வட்டியானது 1957 ஆம் ஆண்டு பணம் கடன் கொடுப்போர் சட்டத்தின் பிரிவு 7-ன் கீழ் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட வட்டியை விடக் கூடுதலானது எனப் பொருள்படும்.இச்சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆனால் பொருள் வரையறை செய்யப்படாத சொற்கள் மற்றும் சொற்றொடர்கள், 1957 ஆம் ஆண்டு த.நா. பணம் கொடுப்போர் சட்டத்தில் அதற்கென உள்ள பொருளையே கொண்டிருக்கும்.

    😄😆
வரம்பிகந்த வட்டி விதிப்பதை தடை செய்தல்

நபர் எவரேனும் அவரால் கொடுக்கப்பட்ட கடன் தொகைக்கு வரம்பிகந்த வட்டி விதிக்கலாகாது.

   😄🙂

தண்டனை

1957 –ஆம் ஆண்டு த.நா.கடன் கொடுப்போர் சட்டத்தில் கண்டுள்ளது எது எவ்வாறு இருப்பினும், எவரொருவர் பிரிவு 3-ன் காப்புரைகளை மீறுவாராயின் அல்லது கடன் தொகையினை வசூல் செய்திட எவரேனும் கடனாளியை தொந்திரவு அல்லது தொந்திரவு செய்திட உடந்தையாக இருப்பாராயின், 3 ஆண்டுகள் வரையான காலத்திற்கு நீடிக்கத்தக்க சிறைத் தண்டனையுடன் மற்றும் ரூ.30,000 வரை நீடிக்கத்தக்க அபராதமும் விதித்து தண்டிக்கப்படத்தக்கவராவர்.

      😁 🙃

நீதிமன்றத்தில் பணம் வைப்பீடு செய்தல், மனுதாக்கல் மற்றும் நடைமுறை

எவரோனும் நபரிடமிருந்து கடனாளி தான் பெற்ற கடன் தொகையினைப் பொறுத்து, 1957 ஆம் ஆண்டு த.நா. பணம் கடன் கொடுப்போர் சட்டத்தின் பிரிவு 7-ல் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட வட்டித் தொகையுடன் பணத்தினை, ஆள்வரை கொண்ட நீதிமன்றத்தில், முழு அல்லது பகுதி கடன் மற்றும் அதற்கான வட்டி நேர்விற்கேற்ப, பதிவு செய்யும் வகையிலான மனுவுடன், வைப்பீடு செய்திடலாம்.நீதிமன்றமானது உட்பிரிவு (1)ன் கீழ் மனு வரப்பெற்றவுடன், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள நபருக்கு பிரதியை அனுப்பி, நீதிமன்றத்தால் வழங்கப்படக்கூடியவாறான 15 நாட்களுக்குள் வழக்கிற்கான தனது கூற்றினை அளிக்குமாறு நெறியுறுத்திடும். நீதிமன்றமானது, உரிய விசாரணைக்குப் பின்னர் மற்றும் தரப்பினர்களின் கூற்றுகளை பரிசீலனை செய்த பின்னர், கடன் தொகை முழு அல்லது பகுதி மற்றும் வட்டி நேர்விற்கேற்ப உளநிறைவு பதிவுடன் ஆணைகளை பிறப்பிக்கும்.

😁😉

சொத்து உடைமையினை மீட்டல்

நீதிமன்றமானது, கடனாளி மனு தாக்கல் செய்ததின் பேரில், கடன் தொகை அல்லது அதற்கான வட்டிக்கு எவரேனும் நபரால் வலுவந்தமாக எடுத்துக்கொள்ள அசையும் அல்லது அசையா சொத்தின் உடைமையினை மீட்பதற்கு உத்திரவு பிறப்பிக்கலாம்.

     😇😋

தன்னிச்சையாக வெளிப்படுத்துதல்

இந்த அவசரச் சட்டம் த.நா. அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஒரு திங்களுக்குள், வரம்பிகந்த வட்டி விதிக்கும் நபர் எவரும், தான் கொடுத்த கடன் தொகைக்கு, 1957 ஆம் ஆண்டு தமிழ்நாடு பணம் கொடுப்போர் சட்டம் பிரிவு 7-ன் கீழ் அரசினால் நிர்ணயியக்கப்பட்ட வட்டியினை விதிக்க உள்ள தமது எண்ணத்தினை, நீதி மன்றத்தின் முன்னான மனுவில் வெளிப்படுத்தினால் அவ்வாறான வெளிப்படுத்தலின் பேரில் அவ்வாறான கடன் தொகைக்கு அரசினால் 1957-ஆம் ஆண்டு நிர்ணயக்கப்படும் மற்றும் அவ்வாறான கடன் பொறுத்து இந்த அவசரச் சட்டத்தின் கீழான குற்றங்களுக்கு குற்றவழக்கு தொடரப்படாது.

             😄    😇
வட்டியினை சரிகட்டல்

கடன் தொகையினை வட்டியுடன் தீர்வு செய்திட வேண்டி கடனாளியால் தாக்கல் செய்யப்படும் மனுவின் பேரில், த.நா. பணம் கடன் கொடுப்போர் சட்டம் பிரிவு 7ன் கீழ் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட வட்டிக்கு மேல் கொடுக்கப்பட்ட தொகையினை, கடன் தொகைக்கு சரிகட்ட உத்திரவு பிறப்பிக்கலாம்.

    😄🙃

தற்கொலைக்கு உடந்தை

கடனாளி அல்லது அவரது குடும்ப உறுப்பினர் தற்கொலை செய்து கொள்கிறவிடத்து மற்றும் அவ்வாறான தற்கொலைக்கு உடன் முன்னர் கடனாளி அல்லது அவரது குடும்ப உறுப்பினர் எவரோனும், யாதொரு நபரால் தொந்திரவு செய்யப்பட்டிருப்பின், மாறாக மெய்ப்பிக்கப்பட்டாலன்றி, கடன் கொடுத்த நபர், அவ்வாறான தற்கொலைக்கு உடந்தையாக கருதப்படுவார்.

           😇😁

விளக்கம்: இப்பிரிவின் நோக்கத்திற்கிணங்க “குடும்ப உறுப்பினர்” எனில், வாழ்கைத்துணை, மணமாகாத மகள் அல்லது மணமாகாத மகன் எனப் பொருள்படும்.

      😇🙃

அவசரச் சட்டம் பிற சட்டங்களை குறைவுறச் செய்திடாது

இந்த சட்டத்தின் கீழான குற்றங்களைப் பொருத்து, 1957 ஆம் ஆண்டு த.நா. கடன் கொடுப்போர் சட்டம் பிரிவு 12-ன் காப்புறைகள் பொருந்தாது. இச்சட்டத்தின் காப்புரைகள் தற்போது செல்லாற்றலிலுள்ள வேறு ஏதேனும் சட்டத்தின் காப்புரைகளுக்கு கூடுதலாக இருக்குமேயன்றி, குறைவுறச் செய்திடாது.

                 😎     🙂 
1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு பணம் கொடுப்போர் சட்டத்தின் காப்புரைகள் பொருந்துகை

இச்சட்டத்தின் வகையங்களுக்கு உட்பட்டு, 1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு பணம் கொடுப்போர் சட்டத்தின் காப்புரைகள் பணம் கொடுப்போர்க்கு, வேண்டிய மாறுதல்களுடன், இந்த சட்டம் பிரிவு 3-ல் குறிப்பிடப்பெற்ற நபருக்குப் பொருந்துவனவாகும்.

                     😟    🙁

விளக்கம்: நபர் ஒருவரின் செய்கை இந்த சட்டத்தின் கீழும் 1957 ஆம் ஆண்டு தமிழ்நாடு பணம் கொடுப்போர் சட்டத்தின் கீழும் குற்றமாக அமைகிறவிடத்து, இந்த சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடரப்படும்.

ஆதாரம் : (தினமனி)

No comments:

Post a Comment