தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 இன் 7 வது பிரிவு மிக முக்கியமான பிரிவாகும் "மனுதார் கோரிக்கையை தீர்வு செய்தலுக்கான பிரிவாகும்."
பிரிவி:7 (1) இல் 30 தினங்களுக்குள் தகவல்களை வழங்க வேண்டும் என்று பொதுத் தகவல் அலுவலரின் பணியை வரையறுக்கிறது.
பிரிவு:7(2) இல் மனுதாரின் வேண்டுகோளைப் பெற்ற பொதுத்தகவல் அலுவலர் குறித்துரைக்கப்பட்ட 30 தினங்களுக்குள் தகவல்களோ, அல்லது அதற்குரிய பதிலோ வழங்கத் தவறும் பட்சத்தில் தகவல் வழங்க மறுப்பதாக கருதி மேல்முறையீடு செய்யலாம்
பிரிவு: 7(3)இல் குறித்துரைக்கப்பட்டது மனுதார்
கோரியுள்ள தகவல்கள் மொத்தம் எத்தனைப் பக்கங்கள் உள்ளது என்பதையும் அத்தகவல்களுக்கு மொத்தம் எவ்aளவுகட்டணம் செலுத்த வேண்டும் என்பதையும் மனுதாருக்கு பொதுத்தகவல் அலுவலார் தெரிவித்து கடிதம் வழங்க வேண்டும் என்பதையும், மிக அழகாக விளக்கி கூறியுள்ளது.
பிரிவு: 7(4) மனுதாரர் கோரியுள்ள தகவல்களை அலுவலகக் கோப்புகளில் மனுதாரரே நேரில் பார்வையிட்டு அவருக்குத் தேவையான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு பொதுத்தகவல் அலுவலர் உதவி செய்ய வேண்டும் என்று வரையறுத்துள்ளது.
பிரிவு: 7(5) தகவல் அச்சடிக்கப்பட்ட படிவத்தில் அல்லது மின்ணனுப் படிவம் எதிலும் அளிக்கப்பட வேண்டிய திருக்கிறவிடத்து மனுதாரர் 6 வதுபிரிவில் வகுத்துரைக்கப்பட்ட கட்டணத்தை செலுத்துதல் வேண்டும் (வரம்புரையாக) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வகுத்துரைக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக- அல்லது உரிய மாநில அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்படுகிற கட்டணம் எதுவும் வசூலிக்கப்படலாகாது
பிரிவு: 7(6) தாமத்மாக வழங்கப்படுகின்ற தகவல்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்காமல் இலவசமாக வழங்கப் படுதல் வேண்டும்.
பிரிவு: 7(7) இல் தகவல் வழங்கலாம்/ அல்லது வேண்டாம் என்பதை மூன்றாம் தரப்பினருக்கு தகவல் வழங்குவது குறித்து ஒரு தீர்மானமான முடிவு எடுக்க வேண்டும்
பிரிவு: 7(8) இல் மனுதாரின் வேண்டுகோள் கோரிக்கை மறுக்கப்படும் போது அப் பொதுத் தகவல் அலுவலர் 1) மறுப்பதற்கான நியாயமான காரணத்தையும், 2) மறுக்கப்பட்ட பின்னர் முதல் மேல்முறையீடு எவ்வளவு காலத்திற்குள் ம்மனுதாரால வழங்கப்பட வேண்டும் என்ற கால வரையறையை தெரிவித்தும் 3)௳எல்முரையீட்டு அதிகார அமைப்பு அதன் விலாசம் ஆகிய விபரங்களையும் தெரிவித்தல் வேண்டும்.
பிரிவு: 7(9) இல் பிரச்சினைக் குரிய தகவல்களை / பதிவுருக்களை பாதுகாக்க வேண்டியதுள்ளது என்றாலும், தகவல் வழங்குவதால் தீங்கு நேருமோ என்று அச்ச முற்றாலும் அத்தகவல்கள் வழங்கத்தேவையில்லை அப்படி எதுவும் இல்லையென்றால் அத்தகவல் மனுதார் ஆசைப்பட்டபடியே மனுதாருக்கு வழங்கப்படுதல் வேண்டும்
No comments:
Post a Comment