Tuesday, 27 March 2018

தமிழக காவல் துறையின்  சட்டம் ஒழுங்கு பிரிவில் உள்ள அதிகாரிகள் விபரமும் தொடர்பு எண் அதிகார எல்லை அமைப்பு முறை

தமிழக காவல் துறையின்  சட்டம் ஒழுங்கு பிரிவில் உள்ள அதிகாரிகள் விபரமும் தொடர்பு எண் அதிகார எல்லை அமைப்பு முறை

தமிழக காவல் துறை காவல் துறையின் இயக்குநர் தலைமையில் உள்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றது. காவல் துறையின் இயக்குநர் என்ற அந்தஸ்த்தில் சம அதிகாரத்தில் பல காவல் துறை இயக்குநர்கள் பல பிரிவுகளுக்கு இருந்தாலும் அவர்கள் அந்த பிரிவின்  காவல் துறையின் இயக்குநர் என்று அழைக்கப்படுவார்கள்  எகா காவல் துறை இயக்குநர் (CSCID ) காவல் துறை இயக்குநர் EOW   (பொருளாதார குற்ற பிரிவு)    ஆனால்  அனைவரும் காவல் துறையின் இயக்குநரின்  பொதுவான  நிர்வாக கட்டுப்பாட்டில் வருவார்கள் 

காவல் துறை இயக்குனரும் DGP  சட்டம் ஒழுங்கு காவல் துறை இயக்குனரும் DGP (L&O)  இரு பதவிகளாக இருந்தாலும் ஒருவரே  இரு பதவியில் உள்ளார்.  சட்டம் ஒழுங்கு  காவல் துறை இயக்குநருக்கு DGP (L&O)  அடுத்த இடத்தில் கூடுதல்  காவல் துறை இயக்குநர் (சட்டம் ஒழுங்கு)  ADGP (L&O) உள்ளார்.

தமிழக காவல் துறை 4 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு மண்டலத்திலும் மண்டல காவல் துறை தலைவர் நிர்வாகத்தில் உள்ளது சென்னை தவிர மற்ற மாநகரங்களான  மதுரை சேலம் திருப்பூர் கோவை திருச்சி நெல்லை ஆகியவை காவல் ஆனையாளர் நிர்வாகத்தில் உள்ளது .

கூடுதல்  காவல் துறை இயக்குநர் (சட்டம் ஒழுங்கு)  ADGP (L&O) மேற்பார்வையில் மண்டல  காவல் துறை தலைவர்கள் (IG)  காவல் ஆனையாளர்கள் செயல் படுகின்றார்கள்

சென்னை பெருநகர காவல் ஆனையாளர் காவல் துறை இயக்குநர் அந்தஸ்த்தில் காவல் துறை இயக்குநருக்கு இனையானவர்

காவல் துறை நிர்வாகம் (வடக்கு மண்டலம்)

சென்னையை தலைமையிடமாக கொண்ட வடக்கு மண்டல காவல் துறையில் காஞ்சிபுரம் திருவள்ளூர் விழுப்புரம் கடலூர் வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்கள் வருகின்றன.

வடக்கு மண்டல காவல் துறை தலைவர் அலுவலகம் சென்னை 600 016 ஆலந்தூரில் ஆலந்தூர் நகராட்சி கட்டிடம் அருகில் இரயில்வே ஸ்டேசன் ரோடில் உள்ளது  IG  (North Zone)   044-22324232   044-22314232  nzcontrol@gmail.com

சென்னை பெருநகர காவல் ஆனையாளர் வடக்கு மண்டல காவல் துறை தலைவர் கட்டுப்பாட்டில் வராது  சென்னை பெருநகர காவல் ஆனையாளர்  பதவியானது காவல் துறை இயக்குனர் DGP பதவிக்கு இனையான பதவி

வடக்கு மண்டல காவல் துறை தலைவர் கட்டுப்பாட்டில் வரும் காவல் துறை துனை தலைவர்கள் (IG)
1 காஞ்சிபுரம் சரகம் 
2. விழுப்புரம் சரகம்
3. வேலூர் சரகம்

காஞ்சிபுரம் சரக காவல் துறை துனை தலைவர் (DIG) கட்டுப்பாட்டில் வரும் மாவட்டங்கள்
1 காஞ்சிபுரம்,
2. திருவள்ளூர்
DIG Kancheepuram   044-27239009   044-27239004  rangeofficekpm@yahoo.co.in

வேலூர் சரக காவல் துறை துனை தலைவர் DIG  கட்டுப்பாட்டில் வரும் மாவட்டங்கள்
1 வேலூர்
2 திருவண்ணாமலை
DIG Vellore   0416-2220402   04146-2232602  vlr_digvellore@yahoo.in

விழுப்புரம் சரக காவல் துறை துனை தலைவர் (DIG)  கட்டுப்பாட்டில் வரும் மாவட்டங்கள்
1 விழுப்புரம்
2 கடலூர்
DIG Villupuram   04146-223620   04146-223620   dig_vpm@yahoo.com

காவல் துறை நிர்வாகம்
(மத்திய மண்டலம்)

திருச்சியை தலைமையிடமாக கொண்ட மத்திய மண்டல காவல் துறையில் திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டனம், திருவாரூர், கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் வருகின்றன.
IGP Central Zone.  0431-2333755   0431-2333866  igczoffice@gmail.com

திருச்சி மாநகர காவல் ஆனையாளர் மேற்கு மண்டல காவல் துறை தலைவர்  (IG)   கட்டுப்பாட்டில் வரமாட்டார் நேரடியாக காவல் துறை கூடுதல் இயக்குனர் (சட்டம் ஒழுங்கு) கட்டுப்பாட்டில் வருகின்றார்

தஞ்சை மாநகராட்சியாக இருந்தாலும் காவல் துறையில் மாநகர பகுதி அல்ல தஞ்சை மாநகராட்சி பகுதியும்தஞ்சை மாவட்ட எஸ் பி கட்டுபாட்டில் வருகின்றது

மத்திய மண்டல காவல் துறை தலைவர் DIG கட்டுப்பாட்டில் வரும் காவல் துறை துனை தலைவர்கள்
1 திருச்சி சரகம்
2. தஞ்சாவூர் சரகம்

திருச்சி சரக காவல் துறை துனை தலைவர் DIG கட்டுப்பாட்டில் வரும் மாவட்டங்கள்
1 திருச்சி,
2. பெரம்பலூர்,
3. அரியலூர்,
4. கரூர்
DIG Trichy  0431-2333109   0431-2333909   digtrichyrange@yahoo.com

தஞ்சாவூர் சரக காவல் துறை துனை தலைவர் DIG கட்டுப்பாட்டில் வரும் மாவட்டங்கள்
1, தஞ்சாவூர்
2. நாகப்பட்டனம்,
3 திருவாரூர்,
4. புதுக்கோட்டை

DIG Thanjavur    04362-277477,  9498134567   04362-272477  digtan2009@yahoo.in

காவல் துறை நிர்வாகம்
(மேற்கு மண்டலம்)

கோவையை தலைமையிடமாக கொண்ட மேற்கு மண்டல காவல் துறையில் கோவை உதகை திருப்பூர் ஈரோடு சேலம் நாமக்கல் தருமபுரி மற்றும் கிருஷ்னகிரி மாவட்டங்கள் வருகின்றன.
IG West Zone   0422-2223585   0422-2223584  wzcontrol@gmail.com

கோவை திருப்பூர் சேலம் ஆகிய மாநகர காவல் காவல் ஆனையாளர் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் IG  கட்டுப்பாட்டில் வரமாட்டார் நேரடியாக காவல் துறை கூடுதல் இயக்குனர் (சட்டம் ஒழுங்கு)  ADGP L&O கட்டுப்பாட்டில் வருகின்றார்
ஈரோடு மாநகராட்சியாக இருப்பினும் காவல் துறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP கட்டுப்பாட்டில் வருகின்றது அதாவது காவல் துறை நிர்வாகத்தில் ஈரோடு  மாநகரம் அல்ல

மேற்கு மண்டல காவல் துறை தலைவர் கட்டுப்பாட்டில் வரும் காவல் துறை துனை தலைவர்கள்
1 கோவை சரகம்
2. சேலம் சரகம்

கோவை சரக காவல் துறை துனை தலைவர் DIG கட்டுப்பாட்டில் வரும் மாவட்டங்கள்
1. கோவை
2. உதகை
3. திருப்பூர்
4. ஈரோடு
DIG Coimbatore  0422-2221500   0422-2221500  digcbe@gmail.com

சேலம் சரக காவல் துறை துனை தலைவர் DIG கட்டுப்பாட்டில் வரும் மாவட்டங்கள்
1. சேலம்
2. நாமக்கல்
3. தருமபுரி
4. கிருஷ்னகிரி

DIG Salem   0427-2317282   0427-2312075   dig.slm@tncctns.gov.in

தென்மண்டல காவல் துறை நிர்வாகம்
காவல் துறை தலைவர்  (IG)  (தென் மண்டலம்)
அலுவலகம்: மதுரை
IG (SOUTH ZONE) MADURAI  0452-2522596  0452-2522596 igpsz@gmail.com
(மதுரை மற்றும் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தென் மண்டல காவல் துறை தலைவர் கட்டுப்பாட்டில் வரமாட்டார் நேரடியாக காவல் துறை கூடுதல் இயக்குனர் (சட்டம் ஒழுங்கு) ADGP L&O  கட்டுப்பாட்டில் வருகின்றார் காவல் துறை தலைவர் பதவிக்கு இணையான பதவி )
தென் மண்டல காவல் துறை தலைவர் IG கட்டுப்பாட்டில் வரும்   மாவட்டங்கள்
1.மதுரை  2 திண்டுக்கல்  3 இராமநாதபுரம்   4  நெல்லை   5  விருது நகர்  6 தேனி   7 சிவகங்கை    8 தூத்துக்குடி     9 கண்ணியாகுமரி

தென் மண்டல காவல் துறை தலைவர் IG கட்டுப்பாட்டில் வரும்  காவல் துறை துனை தலைவர்கள் DIG
1 DIG மதுரை
2 DIG திண்டுக்கல்
3 DIG இராமநாதபுரம் 
4 DIG  நெல்லை

மதுரை  காவல் துறை துனை  தலைவர் கட்டுப்பாட்டில் வரும்   மாவட்டங்கள்
1.மதுரை   
2  விருது நகர்
DIG Madurai 0452-2531317 0425-2539539 digmrm@gmail.com

திண்டுக்கல்  காவல் துறை துனை  தலைவர் DIG கட்டுப்பாட்டில் வரும்   மாவட்டங்கள்
1  திண்டுக்கல்  
2  தேனி
DIG Dindigul 0451-2411800 - digdglcoff@gmail.com

இராமநாதபுரம்  காவல் துறை துனை  தலைவர் DIG கட்டுப்பாட்டில் வரும்   மாவட்டங்கள்
1 இராமநாதபுரம்
2.  சிவகங்கை
DIG Ramnad 04567-230780 - digramnad@yahoo.in

நெல்லை  காவல் துறை துனை  தலைவர் DIG கட்டுப்பாட்டில் வரும்   மாவட்டங்கள்
1 நெல்லை
2 தூத்துக்குடி 
3 கண்ணியாகுமரி
DIG Tirunelveli 0462-2568031 - digtinrg@yahoo.co.in

No comments:

Post a Comment