Tuesday, 27 March 2018

கந்து வட்டி: புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

 

கந்து வட்டி: புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு
   |  

அதிக வட்டி அல்லது கந்து வட்டி பிரச்னை தொடர்பாக புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டத்தை சேலம் மாவட்டத்தில் தீவிரப்படுத்தவும், இது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கந்து வட்டியில் கடன் வாங்கி பாதிக்கப்பட்டோர் அச்சட்டத்தில் உள்ள பயன்பாடுகளை அறிந்து கொள்வதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கந்துவட்டி விதிப்பு தடை சட்டத்தை சேலம் மாவட்டத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்திட மாவட்ட ஆட்சியர் தலைமையில், காவல் கண்காணிப்பாளர், சார்-ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் கொண்ட மாவட்ட அளவிலான குழு மற்றும் வட்டாட்சியர் தலைமையில் வட்ட அளவிலான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.  கந்துவட்டி தொடர்பான புகார்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
தினவட்டி, மணி நேர வட்டி, கந்து வட்டி, மீட்டர் வட்டி, தண்டல் போன்ற வரைமுறை இல்லாத வட்டி தொகையினை எவரேனும் கொடுக்கப்பட்ட கடன் தொகைக்கு அதிக வட்டி அல்லது கந்து வட்டியாக வசூலிப்பது தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம்-2003 பிரிவு 4-இன்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
கந்துவட்டி குறித்த புகார் தெரிவிக்க தொலைபேசி எண் (1077)  அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர்-9488403459, மேட்டூர் சார்-ஆட்சியர்-9445000435, சேலம் வருவாய் கோட்டாட்சியர்-9445000433, ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர்-9445000434, சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர்-9445000436, காவல் துணை ஆணையர்-9498123555, சேலம் காவல் துணை கண்காணிப்பாளர்-9498174974, ஆத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர்-9043004430, ஓமலூர், மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர்-9498168485, சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளர்-9498165825 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

No comments:

Post a Comment