பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ( women harassment act ) பிரிவு - 4 கூறுவது என்ன ?
பெண்கள் மீது தேவையற்ற தாக்குதல் , அவர்களிடம் முறைதவறி நடத்தல் , ஆபாசமான முறையில் அவர்கள் முன் செய்கை செய்தல் குறிப்பாக சேலையைப் பிடித்து இழுத்தல் , தலைமுடியைப் பிடித்து இழுத்தல் , சீண்டுதல் , பாலியல் ரீதியாக தொல்லைக்கு உட்படுத்துதல் மற்றும் இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் பேசுதல் போன்றவைகள் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு - 4 ன் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் . இதற்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனைகளோடு,அபராதமும் விதிக்கும் வகையில் வகை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே IPC- இந்திய தண்டனை சட்டம் 354 என்ற பிரிவு பெண்களுக்கெதிரான குற்றத்தை வரையறுக்கிறது . அந்த பிரிவின் படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்தாலும் வளர்ந்து வரும் நாகரீக சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பின்மையை கருத்தில் கொண்டு மேற்படி பெண்கள் வன்கொடுமைத் தடுப்பு சட்டம் இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளது....
Tuesday, 27 March 2018
பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ( women harassment act )
Labels:
art
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment