அட்டவணை ஜாதியினர் மற்றும் அட்டவணை பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு விதிகளில், விதி 12 மாவட்ட நிர்வாகம் நிவாரணங்களை வழங்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. அந்த நிவாரணங்களை எவ்வாறு வழங்க வேண்டும் என்று விதி 12-ல் உள்ள இணைப்பு 1 - ல் கூறப்பட்டுள்ளது .
அதன்படி கொலை, வன்புணர்ச்சி, நிரந்தர இயலாமை, கொள்ளை ஆகிய வன்கொடுமைக்கு ஆளான நபருக்கு அல்லது அவரது குடும்பத்தினருக்கு, அரசாணை எண் - 192, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, நாள் - 9.9.2014-ன்படி வருவாய் ஈட்டும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் இறந்து விட்டால், உதவித்தொகை வழங்குவதற்கான வரைமுறை விதி 12(4) ன்படி உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்
மேலும் வன்கொடுமை நடந்த தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள் பின்வரும் உதவிகளை பெறுவதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
1. இறந்து போன அட்டவணை ஜாதியினர் மற்றும் அட்டவணை பழங்குடியினரின் இளம் பெண்கள் அல்லது சார்ந்திருக்கும் மற்றவர்களுக்கு மாதம் ரூ. 1000/- வீதம் ஓய்வூதியம் அல்லது இறந்து போனவரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு வேலை அல்லது தேவைப்பட்டால் விலைக்கு வேளாண்மை நிலமும், வீடும் வாங்கி கொடுக்க வேண்டும்.
2. குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களை பராமரிக்க ஆகும் முழு செலவுத்தொகையையும் வழங்க வேண்டும். மேலும் குழந்தைகளை ஆசிரமப் பள்ளிகள் / உறைவிடப் பள்ளிகளில் சேர்த்து கொள்ளப்பட வேண்டும்.
3. மூன்று மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, கோதுமை, பயிர் வகைகள் ஆகியவற்றை வழங்க வேண்டும். தேவையான பாத்திரங்களும் கொடுக்கப்பட வேண்டும்.
(இது குறித்த உத்தரவு மதுரை உயர்நீதிமன்றம் CRL. OP. NO - 15874/2015 ல் பிறப்பித்துள்ளது)
மேற்கண்ட சங்கதிகளை குறிப்பிட்டு, ஜாதி ரீதியாக கொலை செய்யப்பட்ட அட்டவணை ஜாதியை சேர்ந்த ஒருவரின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
W. P. NO - 13035/2015, DT - 29.1.2016
சுதா Vs உள்துறை செயலாளர், தமிழக அரசு மற்றும் பலர்
(2016-1-TLNJ-CRL-190)
No comments:
Post a Comment