ரூ.10 பேருந்து டிக்கெட் பிரச்னை: பயணிக்கு ரூ.13 ஆயிரம் இழப்பீடு வழங்க ஆணை:
[தீர்ப்பு நகல் --- தமிழ் வரி வடிவில்,]
இரு அரை டிக்கெட்டுகளை, முழு டிக்கெட் எடுக்க வைத்த விவகாரத்தில் கூடுதலாக வசூலித்த ரூ.10-ஐ, ரூ.13 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையுடன் ராஜபாளையத்தில் உள்ள தனியார் பேருந்து நிறுவனம் வழங்க, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. விருதுநகர் புல்லக்கோட்டை ரோடு, இந்திராநகரைச் சேர்ந்தவர் க.சங்கரநாராயணன். இவர் 2.2.2011-ம் தேதி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். இவருடன் மனைவி மாரியம்மாள், குழந்தைகள் ச.பிரகாஷ், ச.சிவக்குமார் (11), ச.பாண்டிச்செல்வி (7), ச.கார்த்திகேயன் (9) ஆகியோரும் வந்துள்ளனர். குழந்தைகள் மூவருக்கும் அரை டிக்கெட் சங்கரநாராயணன் கேட்டுள்ளார். ஆனால் நடத்துநர் பாண்டிச்செல்விக்கு மட்டும் அரை டிக்கெட் தருவதாகவும், மற்ற இருவருக்கும் முழு டிக்கெட் தான் தர முடியும் என்றும் கூறியுள்ளார். வயதும் குறைவு, குழந்தைகளின் உயரமும் குறைவாக இருப்பதை எடுத்துக் கூறியும் நடத்துநர் ஏற்க மறுத்து முழு டிக்கெட் கட்டணம் வசூலித்துள்ளார்.
இதனையடுத்து இரு டிக்கெட்டுகளுக்கும் தலா ரூ.5 வீதம் ரூ.10 கூடுதலாகக் கொடுத்து முழு டிக்கெட்டை சங்கரநாராயணன் வாங்கியுள்ளார். தனியார் பேருந்து நடத்துனரின் செயல்பாட்டில் சேவை குறைபாடு இருப்பதாயும், தனக்கு ஏற்பட்ட மிகுந்த மன உளைச்சல் மற்றும் மனகஷ்டத்திற்கு ரூ.1 லட்சம் இழப்பீடு கேட்டும், கூடுதலாக வசூலித்த ரூ.10-யை திரும்பத் தரக் கோரியும் சங்கரநாராயணன் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி வ.பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் ச.சங்கர், ச.கற்பகச்செல்வி ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் அளித்த தீர்ப்புரை விவரம்: சம்பவத்தன்று பணியில் இருந்த நடத்துநர் தற்போது பணியில் இல்லை என்ற வாதம் ஏற்புடையதல்ல. வேலையாளின் செயலுக்கு வேலை கொடுப்பவும் பொறுப்பாவார். குழந்தைகள் கார்த்திகேயன், சிவக்குமார் ஆகியோருக்கு அரைக்கட்டணம் வாங்குவதற்குப் பதில், முழுக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக வசூலித்த ரூ.10-ஐ திரும்பத் தர வேண்டும். இவர்களின் செயல்பாட்டால் சங்கரநாராயணனுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும் வழக்கு செலவிற்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். இத் தொகையை உத்தரவு பிறப்பித்த ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
SOURCE: dinamani 22nd October 2016
பேருந்து சம்மந்தமான எனது முந்தைய பதிவுகள்:
அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1201708716639677
போக்குவரத்து அதிகாரிகளுக்கு ரூ.28 ஆயிரம் அபராதம் : நெல்லை நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1201014383375777
ரூ.100 கொடுத்து டிக்கெட் கேட்டவரைத் திட்டிய நடத்துநர்: ரூ.12 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் மன்றம் உத்தரவு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1196043840539498
போக்குவரத்துக் கழக பொதுமேலாளர், பணிமனை மேலாளரை கைது செய்ய உத்தரவு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1195440120599870
[ சுருதி ] பேருந்தில் குழந்தை பலியான வழக்கு; பெற்றோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1186306394846576
அரசு போக்குவரத்துக் கழக பேருந்தில் சேவை குறைபாடு - நகர்வோர் கோர்ட் அபராதம்:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1184898394987376
150 காசுக்கு ரூ.17 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் குறைதீர் மன்றம் தீர்ப்பு
https://www.facebook.com/groups/685954204947280/permalink/689018637974170/
நடுவழியில் பஸ்சை நிறுத்தியதால் மன உளைச்சல்: தந்தை, மகளுக்கு ரூ. 50 ஆயிரம் நஷ்ட ஈடு : நுகர்வோர் கோர்ட் உத்தரவு
https://www.facebook.com/groups/685954204947280/permalink/689676514575049/
தகவல் தெரிவிக்காமல் பேருந்து பயணம் ரத்து: பயணிக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க நிறுவனத்துக்கு உத்தரவு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1184839271659955
அலைக்கழித்த ஆம்னி பஸ் நிறுவனம் : பயணிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1186924721451410
No comments:
Post a Comment