Wednesday, 25 April 2018

அரசு நிலம் ஆக்கிரமிப்பு 

Penulis : A Govindaraj on 15/11/2015 | 20:39

பொது உபயோக இடம் எதற்காக ஒதுக்கப்பட்டதோ அதற்காகவே மட்டும் பயன்படுத்தபட வேண்டும். மேலும் அந்த பொது உபயோக இடத்தில் நடக்கும் எந்த செயலும் இலவச நோக்கமாக அமைய வேண்டும். 

அந்த பொது உபயோக இடத்தை பாதுகாத்து வருவது என்பது நகராட்சி மற்றும் மாநகராட்சியின் கடமையாகும்.

லே-அவுட் ப்ளாட்டுகளில் பொது உபயோகத்திற்காக ஒதுக்கப்பட்ட ஒரு இடத்தை மருத்துவமனை கட்ட 1980-ல் வாங்கி முறையாக வேலி அமைக்கப்பட்டு அதற்கு நில உரிமையாளர்கள் வரியும் கட்டி வருகின்றார்கள். பின்னர் மாநகராட்சி 2008-ல் அந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்று போர்டு வைக்கின்றார்கள். அந்த போர்டை அகற்ற கோரி நில உரிமையாளர்கள் நீதிப்பேராணை தாக்கல் செய்கின்றார்கள். அந்த நீதிப்பேராணை தள்ளுபடியாகின்றது.

நில உரிமையாளார்கள் மேல்முறையீடு செய்கின்றார்கள்..மேல்முறையீட்டில், 

மாநகராட்சியானது அந்த இடம் லே-அவுட் அந்த, அப்ருவல் செய்யும்போது பொது உபயோகத்திற்காக ஒதுக்கப்பட்டது. தற்போதை நில உரிமையாளருக்கு விற்ற முந்தைய நில உரிமையாளர் லேஅவுட் அப்ருவல் ஆனதும் சட்டப்படியான உரிமையாளர் என்ற தகுதியை இழந்து விடுகின்றார் (Ceases to be a legal owner) மேலும் இந்த இடமானது அந்த லேஅவட்டில் வசிப்பவர்களின் நலனுக்காகவும் மற்றும் பொது மக்களின் நலனுக்காக ஒதுக்கபட்டவை என வாதாடுகின்றார்கள். .

மனுதாரர் அந்த இடத்தில் மருத்துவமனை கட்டி ஒரு 50 சதவீத மருத்துவ வசதி இலவசமாக பொது மக்களுக்கு வழங்கப்படும் என்று ஒரு அபிடாவிட்டு தாக்கல் செய்கின்றார். . மாண்புமிகு நீதியரசர்கள் திரு. பால் வசந்தகுமார் மற்றும் திரு.ரவிச்சந்திரபாபு அடங்கிய அமர்வானது, 50 சதவீதம் மட்டும் பொதுமக்களுக்காகவும் மற்ற 50 சதவீதம் நிலஉரிமையாளர்களின் நன்மைக்காக என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி முந்தைய ஒருமை நீதியரசரின் ஆணையை உறுதி செய்கின்றது.

கருத்து:

லே-அவுட்களில் பொது உபயோகத்திற்காக ஓதுக்கபட்ட இடங்களை விற்பதற்கு அந்த லே-அவுட்டை பிரித்து விற்பனை செய்தவர், லே-அவுட் பிரித்து அதில் ஒரு ப்ளாட்டை விற்பனை செய்ததும் அவர் சட்டப்படியான உரிமையாளர் எனும் தகுதியை இழந்துவிடுகின்றார். - அவருக்கு பின்னர் அவரிடம் இருந்து யவரும் நிலம் வாங்கினாலும் அவர் முறையான சட்டப்படியான உரிமையாளராகமாட்டார்.- பொது உபயோக இடம் எதற்காக ஒதுக்கப்பட்டதோ அதற்காகவே மட்டும் பயன்படுத்தபட வேண்டும்.- மேலும் அந்த பொது உபயோக இடத்தில் நடக்கும் எந்த செயலும் இலவச நோக்கமாக அமைய வேண்டும். அந்த பொது உபயோக இடத்தை பாதுகாத்து வருவது என்பது நகராட்சி மற்றும் மாநகராட்சியின் கடமையாகும்..

பொது உபயோக இடங்களை பற்றிய முழுமையான கருத்தை இந்த [ 2013 ] 8 MLJ Page-257 ] தீர்ப்பில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

( இந்த தீர்ப்பில் பல முன் தீர்ப்புகள் எடுத்து விவாதிக்ககப்ட்டுள்ளது.

Discussed Judgments..
Bangalore Medical Trust -vs- B.S. Muddappa.

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wT2UtbnNrRS1YNTA/view?usp=sharing

K. Rajamani -vs- Alamunagar Residents' Welfare Association.

Sri Devi Nagar Residents Welfare Association, rep. by its President G.P. Godhanavalli, Coimbactore.
-vs- Subbathal.

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wVVlBbG5ldERXMGs/view?usp=sharing

No comments:

Post a Comment