Monday, 9 April 2018

நீதிமன்றத்தில் நடந்து வரும் ஒரு வழக்கில் குற்றச் சார்ந்தினை (Charge for an Offence) எப்போது மாற்ற முடியும்?

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 216 ன்படி அரசு தரப்பிலோ, சாட்சிகளின் தரப்பிலோ, புகார்தாரர் தரப்பிலோ, நீதிமன்றத்தில் குற்றச் சார்ந்தினை சேர்க்கவோ, மாற்றவோ கோரி எந்த மனுவையும் தாக்கல் செய்ய முடியாது. ஆனால் நீதிமன்றம் மட்டுமே தீர்ப்பு கூறுவதற்கு முன்பாக ஒரு வழக்கில் வனையப்பட்ட குற்றச் சார்ந்தினை மாற்றவோ, கூடுதலாக சேர்க்கவோ முடியும்.

எனவே குற்றச் சார்ந்தினை மாற்ற வேண்டும் என்று கூறி யாரும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 216 ன் கீழ் விசாரணை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRL. RC. NO - 393/2010

H. A. அப்துல் ஜப்பார்  Vs ஆய்வாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம், மைலாப்பூர், சென்னை

2010-3-MWN-CRL-368

No comments:

Post a Comment