தீர்ப்பு கடனாளி ஒருவரை கைது செய்து சிறையிலடைக்க உத்தரவிடுவதற்கு முன்பாக நிறைவேற்றுதல் நீதிமன்றம் உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 21 விதி 37 ல் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். தீர்ப்பு கடனாளியை கைது செய்ய உத்தரவிடுவதற்கு முன்பாக ஒரு அறிவிப்பினை உ. வி. மு. ச கட்டளை 21 விதி 37 ன் நீதிமன்றம் கண்டிப்பாக அனுப்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒருவேளை தீர்ப்பு கடனாளி அந்த நீதிமன்றத்தின் ஆள்வரையை விட்டு தப்பி சென்று விடுவார் அல்லது தீர்ப்பாணையை நிறைவேற்றுவதற்கு காலதாமதத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவார் என்று நீதிமன்றம் கருதினால் உ. வி. மு. ச கட்டளை 21 விதி 37(i) ல் கூறப்பட்டுள்ளது எந்தவொரு அறிவிப்பையும் நீதிமன்றம் அனுப்பாமலேயே கைது உத்தரவை பிறப்பிக்கலாம். எனவே அறிவிப்பு அனுப்ப வேண்டும் என்பது நீதிமன்றத்தின் உளத்தேர்விற்கு உட்பட்டதாகும்.
தீர்ப்பு கடனாளி நீதிமன்றத்தின் ஆள்வரையை விட்டு சென்றுவிடுவார், அல்லது தீர்ப்பாணை நிறைவேற்றத்தை தடுப்பார் அல்லது காலதாமதம் ஏற்படுத்துவார் அல்லது கெட்ட எண்ணத்தோடு சொத்தை மாற்றம் செய்துவிடுவார் என்ற நிலையில் தான் நீதிமன்றம் கைது உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உ. வி. மு. ச பிரிவு 51(b) ன்படி தீர்ப்பு கடனாளி, தீர்ப்புத் தொகையை தர மறுத்தாலோ அல்லது பணம் செலுத்துவதை வேண்டுமென்றே தவிர்த்தாலோ உடனடியாக நீதிமன்றம் கைது உத்தரவை பிறப்பிக்கலாம்.
எனவே ஒரு வழக்கின் தீர்ப்பு கடனாளி பணம் செலுத்துவதை வேண்டுமென்றே தவிர்த்தால் நீதிமன்றம் உடனடியாக அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRP. NO - 879/2014
DATE - 12.3.2014
J.வைத்தியநாதன் Vs R. தனபாக்கியம்
2014-1-MWN-CIVIL-778
No comments:
Post a Comment