உண்ண உணவு, உடுத்த உடை, வசிக்க இடம், இந்த மூன்று தேவைகளும் இல்லாத மனித வாழ்க்கை முழுமை பெறுவதில்லை. வாழ்க்கையின்
அடிப்படை ஆதாரங்களான இந்த மூன்றும் எத்தனை மனிதர்களுக்குக் கிடைக்கின்றன?
தம்மைத்தாமே பராமரித்துக் கொள் ளும் நிலையில் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அடிப்படைத் தேவைகளுக்குக்கூட மற்ற வரை அண்டி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள், பரிதாபத்துக்குரியவ ர்கள். தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள இயலா மலும், தன்னைப் பராமரிக்க வேண்டியவரும் கைவிட்டநிலையில் இருக் கும் ஒரு இந்தியக்குடிமகனுக்கு நம் நாட்டுச்சட்டம் என்ன வழிசொல்கிற து? அது கொடுக்கும் பாதுகாப்புதான் என்ன? இந்திய குற்றவியல் சட்டத்தி ன் (Criminal Procedure
Code) பிரிவு 125, 126, 127 மற்றும் 128.
இந்திய நாட்டைப் பொறுத்த வரை சிவில் சட்டங்கள் என சொல்லக் கூடிய தனிமனித உரிமைகளை நிலைநாட்டும் சட்டங்கள் திருமணச் சட்டங்கள், சொத் துரிமை சட்டங்கள், ஜீவனாம்சம் போன் றவை ஒருவர் பின்பற்றும் மதத்தின் அடிப்படையிலேயே இயற்றப்பட்டுள்ளன. எனினும் மேற்கூறிய இச்சட்டப் பிரிவு இந்திய மக்கள் அனைவருக்கும் ஜீவனாம்சம் கோர ஒரு பொதுவா ன சட்டமாகவே உள்ளது.
இந்தச் சட்டத்தின் பிரிவு 125ன் கீழ்…
* தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இய லாத மனைவி.
*தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இயலாத சட்டம் அங்கீகரிக்கும் மற்றும் சட்டம் அங்கீகரிக்காத மைனர் குழந்தைகள். ஒருவேளை இவர்களுக்கு திரு மணம் நடைபெற்றிருந்தாலும் இந்தச் சட்டம் பொருந்தும்.
* வயது வந்த சட்டப்பூர்வமான அல்லது சட்டம் அங்கீகரிக்காத ஒருவரின் மகன், மகள் உடலளவிலோ, மனத்தளவிலோ பாதிக்கப்பட்டி
ருக்கும் பட்சத்தில்.
* ஒரு நபரின் தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள இயலாத தாய், தந்தையர்.
மேற்கூறிய இவர்கள் அனைவரும் தன்னுடைய கணவர், தகப்பன் மற்றும் பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் கோர இந்தப் பிரிவு வழிவகை செய்கிறது. இந்தச் சட்டப் பிரிவில் மனைவி என்ற சொல் சட்டப்பூர்வமான மனைவியை மட்டுமே குறிக்கும். மேலும், கணவரால் விவாகரத்து செய்யப்பட்ட பெண் மறுமண ம் செய்யாத பட்சத்திலும், எந்தவிதமான நிரந்தர
ஜீவனாம்சம் பெறாத பட்சத்திலும், தன்னைத்தானே பராமரி த்துக் கொள்ள எந்த விதமான வருமா னமும் இல்லாத பட்சத்திலும் இந்தச் சட்டத்தின் கீழ் ஜீவனாம்சம் கோர இயலும்.
இச்சட்டத்தின்கீழ் வழக்கு தாக்கல் செய்ய விரும்பும் நபர் தான்எங்கே வசிக்கிறாரோ, எதிர் தரப்பினருடன் கடைசியாக எங்கே வசித்தாரோ, அந்த இடத்திற்குட்பட்ட குற்றவியல் நடுவர் நீதி மன்றத்திலோ (Magistrate Court) அல்லது குடும்பநல நீதிமன்றத்திலோ ஜீவனாம்ச வழக்கு தாக்கல் செய்யலாம். மைனர் குழந்தைகளுக்கு தாயே காப்பாளராக இருந்து வழக்கு தாக்கல் செய்ய இயலும், இது சட்டம் ஏற்றுக் கொள்ளாத குழந்தை க்கும் (Illegitimate child) பொருந்தும். மேலும் இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்
போது இடைக்கால ஜீவனாம்சம் கோரவும் இந்தச் சட்டத்தில் இடமுள்ளது.
நாட்டின் பொருளாதார நிலையில் ஏற்படும் மாற்றம் (rise in cost of living) எதிர் தரப்பின ராக இருக்கும் கணவரின், தந்தையின், மகனின் வருவாயில் ஏற்படும் ஏற்ற இறக்க த்தில் ஏற்படும் மாற்றம், ஜீவனாம்சம் கோரும் மற்றும் ஜீவனாம்சம் பெரும் நபரின் ஊதியம் ஈட்டக்கூடிய நிலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் பொருளாதார ரீதியாக தன்னைப் பாதுகாத்துக்கொ ள்ளக்கூடிய நிலையில் மாற்றம், விவாகரத்தான மனைவியின் மறுமணம் அல்லது விவாகரத்து ஆகாத மனைவியின் தவறான நடத்தை, மைனரிலிருந்து மேஜராகும் பிள்ளைகள் போன்ற ஒரு சில காரணங்களால் நீதிமன்றம் நியமித்த ஜீவனாம்ச தொகையை உயர்த்தவோ, குறைக்கவோ இந்தச் சட்டத்தின் பிரிவு 127ன் கீழ் வழிவகை உள்ளது.
நீதிமன்றம் கொடுத்த ஜீவனாம்சம் தொகை யினை எதிர்தரப்பினர் தராமலும் எந்த வித மான மேல்முறையீடும் செய்யாமலும் இருக் கும்பட்சத்தில் அத்தொகையை பெற ஒருமனு தாக்கல் செய்து அந்தத் தொகையினை நீதி மன்றத்தில் செலுத்தவோ அல்லது ஜீவனாம் சம் கொடுக்காத பட்சத்தில் எதிராளியை சிறை யெடுக்கவோ முடியும். இந்த வழக்குக ளில் எதிர்தரப்பினரிடமிருந்து ஜீவனாம்சம் பெறும் ஒரே நோக்கத்தில்தா ன் அவரை சிறையெடுக்கும் ஒரு முடிவினை நீதிமன்றம் எடுக்கும். எதிர் தரப்பினர் ஜீவனாம்சம் செலுத்திவிடும் பட்சத்தில் சிறையெடுப்பு தவிர்க்கப்படும்.
Savitaben Somabhai Bhatia Vs State of Gujarat and others (2005)
இந்த வழக்கில் ஒரு ஆண் மகன் தன்னை தானே பராமரித்துக் கொள்ள இயலாத நிலையிலிருக் கும் தன்னுடைய மனைவி, மக்கள் மற்றும் பெற்றோரை பராமரிப்பது இயற்கை அவன்மீது விதித்திரு க்கும் தர்மப்படியான ஒரு கடமை. இவ்வாறு கடமையாற்றுவது ஒரு சமூக நீதியின் வெளிப்பாடு என்று ஜீவனாம்சத்தைப் பற்றி தீர்ப்பு வழங்கப்பட்டது... நன்றி... மனிதம் சட்ட உதவி மய்யம்
No comments:
Post a Comment