ஒரு மனிதன் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலியை கட்டிவிட்டால் அந்த திருமணம் வாழ்க்கை துணைவரில் ஒருவர் இறக்கும் பொழுது கலைந்து விடுகிறது. இது விதியின் மூலம் நடைபெறுகிற ஒரு செயலாகும். மற்றொன்று சட்டத்தின் செயல்பாட்டால் திருமணத்தை ரத்து செய்வது ஆகும். இந்த இரண்டு முறைகளை தவிர வேறு எந்த வகையிலும் ஒரு திருமண உறவை திருமணம் செய்து கொண்டவர்கள் அறுத்தெறிய முடியாது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 319 ன் கீழ் ஒரு குற்ற வழக்கில் புதியதாக ஒருவரை எதிரியாக சேர்க்க முடியுமே தவிர கு. வி. மு. ச பிரிவு 125(1) ன் கீழ் ஜீவனாம்சம் கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கணவர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ள ஒருவரை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று கோர முடியாது.
எனவே வாழ்க்கை பொருளுதவி கோரி கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தனது மனைவி வேறொருவருடன் வாழ்ந்து வருவதால் அந்த நபரையும் வழக்கு தரப்பினராக சேர்க்குமாறு கணவர் கோர முடியாது என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. OP. NO - 16923/2014, DT - 16.10.2014
கந்த சுப்பையன் Vs பாக்கியலட்சுமி
2014-2-LW-CRL-617
No comments:
Post a Comment