Monday, 9 April 2018

பாலிசி எடுத்தவர் 23 நாட்களில் உயிரிழப்பு:

வாரிசுக்கு, காப்பீட்டு நிறுவனம், ரூ.5லட்சம் இழப்பீடு வழங்க, கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு :

கோவை: இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தவர், 23 நாட்களில் விபத்தில் இறந்து விட்டதால், அவரது வாரிசுக்கு, காப்பீட்டு நிறுவனம், ரூ.5லட்சம் இழப்பீடு வழங்க, கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.கோவை, டவுன் ஹால், சலீவன் வீதியில் வசித்து வந்தவர் சுதர்சன் பாபு, 55; சென்னை, ஒயிட்ஸ் ரோட்டிலுள்ள ராயல் சுந்தரம் அலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ், ஓராண்டிற்கான பாலிசி எடுத்தார். ஐந்து லட்சம் ரூபாய்க்கு, 2013, ஜன., 28ல் பாலிசி எடுத்த அவர், அதற்கான தவணை தொகையும் செலுத்தினார்.இந்த நிலையில், 2013 பிப்., 21ல், கோவையில் நடந்த விபத்தில், சுதர்சன் பாபு இறந்தார். விபத்து காப்பீட்டு தொகை வழங்கக் கோரி, அவரது மகன் உதய பிரசன்னா, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்தார். இன்சூரன்ஸ் நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை.விபத்து காப்பீடு வழங்கக் கோரி, கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில், உதய பிரசன்னா வழக்கு தாக்கல் செய்தார். மனுவில், 'தந்தை இறந்து விட்டதால், குடும்பத்தினர் வருமானம் இன்றி கஷ்டப்படுகிறோம். விபத்து காப்பீட்டு தொகையினை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார்.இன்சூரன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில், 'இன்சூரன்ஸ் பாலிசி எடுத்த நாளில் இருந்து ஒரு மாதம் கழித்து தான் விபத்து இழப்பீடு வழங்க முடியும்.இன்சூரன்ஸ் பாலிசி நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, பாலிசிதாரர் இறந்து விட்டதால், விபத்து காப்பீடு வழங்க முடியாது' எனத் தெரிவித்தனர்.விசாரித்த நீதிமன்ற தலைவர் செங்கோட்டையன், ''பாலிசி எடுத்த நாளில் இருந்து, காப்பீடு திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. எனவே, இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தவரின் வாரிசுக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை, ஒன்பது சதவீத வட்டியுன் வழங்க வேண்டும்; மன உளைச்சலுக்கு 50 ஆயிரம் ரூபாய்; செலவு தொகை இரண்டாயிரம் ரூபாயை, ராயல் சுந்தரம் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்,'' எனத் தீர்ப்பளித்தார்.
Source: dinamalar  29/08/2017

காப்பீடு சார்பான எனது முந்தைய பதிவுகள்:

சென்னை: பெண்ணுக்கு மருத்துவ செலவு வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1198538986956650

ரூ.2 இலட்சம் வரை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பலன், காப்பீடு செய்தவருக்கு கிடைக்கத்தக்கது – நீதிமன்றம்
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1197320830411799

வீட்டில் திருட்டு போன பொருட்களுக்கு ரூ.3.64 லட்சம் இழப்பீடு தர உத்தரவு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1196761233801092

சேவைக் குறைபாடு: பாதிக்கப்பட்டவர் செலுத்திய தொகையை திரும்ப வழங்க உத்தரவு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1196165527193996

No comments:

Post a Comment