வேம்பு மரத்தில் கதவு போடுவதாக ஏமாற்றிய பர்னிச்சர் கடைக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு தர நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு:
[தீர்ப்பு நகல் --- தமிழ் வரி வடிவில்,]
கோவை: வேம்பு மரத்தில் கதவு போடுவதாக கூறி ஏமாற்றியதால், இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.மேட்டுப்பாளையம், வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் கர்ணன்,43, புதிதாக வீடு கட்டி வந்தார். வீட்டுக்கு தேவையான கதவு, நிலவு செய்வதற்கு, தாயனுாரில் உள்ள, கேரளா பர்னிச்சர்ஸ் ஒர்க்ஸ் நிறுவனத்தில், 2015, ஆக., 28 ல் ஆர்டர் கொடுத்தார். வேம்பு மரத்தில் பலகை மற்றும் நிலவு செய்ய வேண்டும் எனக்கூறி, 22 ஆயிரத்து 500 ரூபாய்க்கு பேசி முடித்தனர்.கதவு மற்றும் நிலவை புதிய வீட்டுக்கு பொருத்தி, ஒரு மாதத்திற்குள் கீறல் ஏற்பட்டதோடு, வண்டு ஓட்டை போட்டது. பாதிக்கப்பட்ட கர்ணன், பர்னிச்சர் ஒர்க் நிறுவன உரிமையாளர் ஸ்ரீதரனிடம் கேட்ட போது, உரிய பதில் அளிக்கவில்லை. வேறு மரத்தையும் மாற்றி கொடுக்கவில்லை.இதையடுத்து, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் கோர்ட்டில் கர்ணன் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ஜெயசங்கரன், கதவு, நிலவு செய்வதற்கு வாங்கிய பணம் 22 ஆயிரத்து 500 ரூபாயை திருப்பி கொடுக்கவும், புதிய கதவு பொருத்த இழப்பீடாக 20 ஆயிரம் ரூபாய்; செலவு தொகையாக 1000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.
Source: dinamalar 21/07/2016
No comments:
Post a Comment